நீங்கள் கொஞ்சம் மாறவில்லை.. நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு பழைய ஹீரோவை வெளிநாட்டில் சந்தித்த நடிகை!
சென்னை: தன்னுடைய பழைய ஹீரோவை நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு வெளிநாட்டில் சந்தித்த நடிகை அவருடன் எடுத்த போட்டோவை இணையத்தில் ஷேர் செய்துள்ளார்.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. 1971 ஆம் ஆண்டு சினிமாவுக்கு அறிமுகமான நடிகர் மம்முட்டி 50 ஆண்டுகளாக மலையாள சினிமாவில் உச்ச நடிகராக கோலோச்சி வருகிறார்.
நடிகர் மம்முட்டி இதுவரை 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் வலம் வருகிறர் நடிகர் மம்முட்டி.

ஏராளமான விருதுகள்
மலையாளம் மட்டுமின்றி, தமிழ், தெலுங்கு, கன்னடா, இந்தி என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார் மம்முட்டி. மூன்று முறை சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றுள்ள மம்முட்டி, 7 முறை கேரள அரசின் விருதுகளை பெற்றுள்ளார். பிலிம் ஃபேர் விருதுகள் உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள மம்முட்டிக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருதையும் வழங்கி கவுரவித்துள்ளது.

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு
70 வயதான போதும் ஆரம்ப கால சினிமாவில் பார்த்ததை போன்றே இருந்து இளம் ஹீரோக்களுக்கு டஃப் கொடுத்து வருகிறார். இந்நிலையில் பிரபல மலையாள நடிகையான பூஜா பத்ரா நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் மம்முட்டியை சந்தித்துள்ளார்.

மம்முட்டியை சந்தித்த நடிகை
நடிகை பூஜா பத்ரா, நடிகர் மம்முட்டியுடன் மேகம் என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். 1999ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் நடிகை பூஜா பத்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் மம்முட்டியுடன் எடுத்த போட்டோவை ஷேர் செய்துள்ளார்.

கொஞ்சம் கூட மாறவில்லை
அந்த போட்டோவுக்கு வீட்டில் உள்ள அனைத்து மேகம் ரசிகர்களுக்கு.. எனக்குப் பிடித்த சக நடிகர்களில் ஒருவரான மம்முட்டியுடன்.. . நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்களைப் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி. நீங்கள் கொஞ்சம் கூட மாறவில்லை... இவ்வாறு நடிகை பூஜா பத்ரா பதிவிட்டுள்ளார்.

கிளாசிக் காம்போ
அந்த போட்டோவை பூஜா பத்ராவின் கணவரான நவாப் ஷாப் முதல் நபராக லைக் செய்து கமெண்ட் பக்கத்தில் ரெட் ஹார்ட் ஐகானை ஷேர் செய்துள்ளார். ரசிகர்களும் கிளாசிக் காம்போ, மெகா ஸ்டார் என பல்வேறு கமெண்டுகளை குவித்து வருகின்றனர்.

கணவருடன் ஹங்கேரியில்
நடிகை பூஜா பத்ரா நடிகர் மம்முட்டியை ஹங்கேரியில் சந்தித்துள்ளார். பூஜா பத்ரா தற்போது ஹங்கேரியில் தனது கணவருடன் நேரத்தை செலவழித்து வருகிறார். கடந்த 27ஆம் தேதி நடிகை பூஜா பத்ரா தனது பிறந்த நாளை கொண்டாடினார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள பூஜா பத்ரா அடிக்கடி தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











