மியா மல்கோவா மட்டுமில்ல.. இந்த நடிகைக்கிட்டேயும் அந்த வேலையைதான் பார்த்திருக்கார் சர்ச்சை இயக்குநர்!
சென்னை: இயக்குநர் ராம்கோபால் வர்மாவின் என்டர் தி கேர்ள் டிராகன் படத்தின் ஸ்டில்கள் வைரலாகி வருகிறது.
Recommended Video
இந்திய சினிமாவின் சர்ச்சை இயக்குநர்களில் ஒருவர் ராம் கோபால் வர்மா. தனது பேச்சில் மட்டுமின்றி தனது படங்களிலும் சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாதவர்.
தற்போது க்ளைமேக்ஸ் என்ற படத்தை இயக்கி வருகிறார் ராம் கோபால் வர்மா. இந்தப் படத்தின் டீசர், ட்ரெயிலர், பாடல் என வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

அடல்ட் காட்சிகள்
தனது ஃபேவரைட் நடிகையான அமெரிக்காவின் மியா மல்கோவாவை வைத்து இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் ராம் கோபால் வர்மா. பாலைவனத்தில் காட்சியாக்கப்பட்ட இந்த படத்தில் ஏராளமான அடல்ட் காட்சிகள் நிரம்பி வழிகின்றனர்.

29ஆம் தேதி ரிலீஸ்
நேற்று முன்தினம் க்ளைமேக்ஸ் படத்தின் பாடல் ஒன்று வெளியானது. இதில் நடிகை மியா மல்கோவா முழுக்க முழுக்க உள்ளாடைகளுடனே நடித்துள்ளார். இந்தப் படத்தை வரும் 29 ஆம் தேதி ஆன்லைனில் ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறியிருக்கிறார் ராம் கோபால் வர்மா.

இரண்டு ட்ரெடயிலர்கள்
இந்நிலையில் அவரது இயக்கத்தில் ரிலீஸ்க்கு தயாராக உள்ள என்டர் தி கேர்ள் டிராகன் படத்தின் ஸ்டில்கள் வைரலாகி வருகிறது. ஏற்கனவே இந்தப் படத்தின் இரண்டு ட்ரெயிலர்கள் வெளியாக பரபரப்பை கிளப்பியது. லிப் லாக் உட்பட பல அடல்ட் காட்சிகள் இந்த படத்திலும் இடம் பெற்றுள்ளது.

ரிலீஸ் ஆகவில்லை
பூஜா பலேகர் என்ற அறிமுக நடிகை ஏகத்துக்கும் கவர்ச்சிக் காட்டியிருக்கிறார். குறிப்பாக சண்டைக் காட்சி ஒன்றில் சேலை தொடை வரை நழுவி செல்லும் வகையில் காலை உயரமாக தூக்கியிருப்பார் பூஜா. ஆக்ஷன் படமான இப்படம் பல சர்ச்சைகளால் இதுவரை ரிலீஸ் ஆகாமல் உள்ளது.

தீயாய் பரவும் போட்டோ
இந்நிலையில் இப்படத்தின் சில போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கும பூஜா பலேகர், படத்தின் ரிலீஸ்க்காக காத்திருப்பதாக கூறியுள்ளார். மியா மல்கோவாவை போன்றே இந்த படத்திலும் நடிகை பூஜா பலேகரை உள்ளாடைகளுடனே நடிக்க வைத்திருக்கிறார் என்று தெரிகிறது. பூஜா பலேகர் ஷேர் செய்துள்ள இந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











