'குடியை விட முடியாமல் தவித்தேன்.. தற்கொலைக்கு முயன்றேன்'.. அஜித் பட நாயகியின் ஷாக் ரிப்போர்ட்!

மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி, தற்கொலைக்கு முயற்சித்ததாக நடிகை பூஜா பட் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Alia Bhatt gets emotional in Interview | Shaheen Bhatt

மும்பை: தீராத மன அழுத்தத்தினால் மதுப்பழக்கத்துக்கு அடிகையாகி, தற்கொலைக்கு முயன்றதாக நடிகை பூஜா பட் கூறியுள்ளார்.

அஜித், பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த 'கல்லூரி வாசல்' படத்தில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை பூஜா பட். இவர் பிரபல பாலிவுட் இயக்குனர் மகேஷ் பட்டின் உறவினர் ஆவார்.

மகேஷ் பட் - சோனி ரஸ்சான் தம்பதியின் மூத்த மகளும், நடிகை ஆலியா பட்டின் அக்காவுமான ஷாஹீன் பட் எழுதிய புத்தக வெளியீட்டு விழா சமீபத்தில் மும்பையில் நடந்தது. மன அழுத்த நோயினால் பாதிக்கப்பட்ட போது தான் அடைந்த வேதனைகள் குறித்து அந்த புத்தகத்தில் அவர் எழுதியுள்ளார். இந்த விழாவில் மகேஷ் பட்டின் மொத்த குடும்பமும் பங்கேற்றது.

பூஜா பட்டின் ஷாக்

பூஜா பட்டின் ஷாக்

இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகை பூஜா பட், ஷாஹீனை போல் தானும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகக் கூறினார். அதன் காரணமாக தான் மதுப்பழக்கத்துக்கு அடிமையானதாகவும், ஒருகட்டத்தில் தற்கொலை செய்ய முயன்றதாகவும் தெரிவித்தார்.

புத்தாண்டு கொண்டாட்டம்

புத்தாண்டு கொண்டாட்டம்

இதுகுறித்து அவர் கூறியதாவது, " ஒருமுறை புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நான் கோவாவில் இருந்தேன். அப்போது என்னை சுற்றி இருந்த எல்லோரும் சந்தோஷமாக இருந்தனர். ஆனால் என்னால் மட்டும் சந்தோஷமாக இருக்க முடியவில்லை.

மதுவுக்கு அடிமை

மதுவுக்கு அடிமை

தீராத மன அழுத்தத்தால் வேதனைப்பட்டேன். மதுப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்தேன். பீச்சில் உட்கார்ந்திருந்த போது, கடலுக்குள் இறங்கி அப்படியே போய்விடலாமா என தோன்றியது. தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தான் என் மனம் முழுவதும் இருந்தது.

மகேஷ் பட் ஆலோசனை

மகேஷ் பட் ஆலோசனை

அப்போது மகேஷ் பட்டுக்கு போன் செய்து பேசினேன். அவர் எனக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கினார். அவர் தான் என்னை தேற்றி தற்கொலை செய்து கொள்ளாதபடி தடுத்தார்", என பூஜா பட் கூறினார்.

கதறி அழுத ஆலியா

கதறி அழுத ஆலியா

இந்த விழாவில் தான் தனது அக்காவை நினைத்து நடிகை ஆலியா பட் கதறி அழுதார். அந்த வீடியோ சமீபத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X