Actor Vijay: சென்னை வந்த க்யூட் டால் பூஜா ஹெக்டே.. விஜய்யின் தளபதி 69 படத்தின் சிறப்பான சம்பவம்!
சென்னை: நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வரும் படம் தளபதி 69. இந்த படத்தின் முதல் கட்ட சூட்டிங் கடந்த மாதம் முதல் வாரத்தில் துவங்கப்பட்டு பாடல் காட்சியின் சூட்டிங் எடுத்து முடிக்கப்பட்டது. முன்னதாக படத்தின் பூஜையும் மிகவும் பிரம்மாண்டமாக போடப்பட்டது.
இதையடுத்து இரண்டாவது கட்ட சூட்டிங் குறித்த அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்தது. இடைப்பட்ட காலத்தில் தன்னுடைய தவெக கட்சியின் முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் மிகச்சிறப்பாக நடத்தி முடித்துள்ளார் விஜய். இந்த முதல் மாநாடே பலரது புருவங்களை உயர்த்தியுள்ளது. அடுத்தடுத்த நடவடிக்கைகளை விஜய் தொடர்ந்து திட்டமிட்டு வருகிறார்.

நடிகர் விஜய்: நடிகர் விஜய்யின் அடுத்தடுத்த அரசியல் நகர்வுகள் ஏராளமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகின்றன. அவரது இறுதிப் படமாக அறிவிக்கப்பட்டுள்ள தளபதி 69 படத்தின் முதல் கட்ட சூட்டிங் கடந்த மாதம் முதல் வாரத்தில் துவங்கப்பட்டு சில தினங்களிலேயே அதிரடி பாடல் காட்சிகளுடன் நிறைவு செய்யப்பட்டது. இதையடுத்து இரண்டாவது கட்ட சூட்டிங் குறித்து அறிவிக்கப்படாத நிலையில், இந்த மாதம் முதல் வாரத்தில் துவங்கும் என்று கூறப்பட்டது. இதனிடையே, தன்னுடைய அரசியல் கட்சி மாநாட்டிற்கான வேலைகளை ஈடுபட்டு பிஸியாகிவிட்டார் விஜய்.
தளபதி 69 படம்: இந்நிலையில் படத்தின் இரண்டாவது கட்ட சூட்டிங் இன்றைய தினம் சென்னையில் துவங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஷூட்டிங்கில் நடிகர் விஜய், நடிகை பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் இணைந்து நடிக்க உள்ளனர். இந்நிலையில் இந்த ஷூட்டிங்கில் பங்கேற்பதற்காக நடிகை பூஜா ஹெக்டே, விமானம் மூலம் சென்னை வந்ததை பார்க்க முடிந்தது. க்யூட்டான மற்றும் இயல்பான உடையில் அவர் சென்னை விமான நிலையத்தில் நடந்து சென்று காரில் ஏறிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள தளபதி 69 படம் அரசியல் சார்ந்த கதைக்களத்தில் உருவாக திட்டமிடப்பட்டுள்ளது.
தவெக மாநாடு: இந்த படத்தில் பாபி தியோல் வில்லனாக களம் இறங்கியுள்ளார். இவர் முன்னதாக கங்குவா படத்தில் சூர்யாவிற்கு வில்லனாக வரலாற்று கதைக்களத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அடுத்ததாக விஜய்யுடன் வில்லனாக அவர் நடிக்க உள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டில் இவரது வில்லன் நடிப்பில் அனிமல் படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை அவருக்கு பெற்றுக் கொடுத்தது. நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் அடித்தளத்தை மிகச் சிறப்பாக அமைத்து வருகிறார் கடந்த மாத இறுதியில் இவரது தவெக அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டுள்ளது.
விஜய்யின் அடுத்தடுத்த நகர்வுகள்: சில விமர்சனங்களை இந்த மாநாடு பெற்றுள்ள போதிலும் ஏராளமான தொண்டர்களை கவர்ந்து இந்த மாநாடு மிகப்பெரிய அளவில் கவனத்தை பெற்றுள்ளது. அடுத்தடுத்த விஷயங்களை மிகவும் உறுதியாக மேற்கொண்டு வருகிறார் விஜய். அந்த வகையில் தளபதி 69 தன்னுடைய கடைசி படம் என்று அவர் தன்னுடைய கட்சியை அறிவித்த போதே தெரிவித்துவிட்டார். இந்த விஷயம் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்திய போதிலும் தங்களுடைய தலைவன் அரசியல் களத்தில் தங்களுக்கு நல்லது செய்வார் என்ற எதிர்பார்ப்புடன் அவர்கள் காத்திருக்கிறார்கள் இதனிடையே தளபதி 69 படம் அவரது அரசியல் களத்திற்கு சிறப்பாக கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் இந்த படம் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











