Don't Miss!
- Education
CISF constable, Driver Recruitment 2023:டிரைவிங் தெரியும்? சி.ஐ.எஸ்.எஃப்.,இல் ரூ.69 ஆயிரத்தில் வேலை...!
- Lifestyle
தக்காளி சாஸ் வெச்சு இத்தனை பொருட்களை சுத்தம் செய்ய முடியுமா? இத படிச்சு நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க...
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
- Automobiles
2-3 லட்ச ரூபா டவுண்பேமென்டிலேயே இந்த எஸ்யூவி கார்களை வாங்கிடலாம்! நம்பவே முடியல.. இந்த காரைகூட வாங்க முடியுமா?
- Sports
முகமது சிராஜை ஏமாற்றுகிறாரா ரோகித்.. நன்றாக ஆடியும் அங்கீகாரம் இல்லை.. மஞ்ச்ரேக்கர் குற்றச்சாட்டு
- News
"ரெக்கார்டு".. 10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பால் தானம் செய்து.. சாதனை செய்த கோவை பெண்.. சபாஷ்
- Technology
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
- Finance
பெண்கள் ஐபிஎல்.. 4670 கோடி கல்லாகட்டிய BCCI.. இங்கேயும் அம்பானி, அதானி..!
பூஜா ஹெக்டே பிறந்தநாள்.. யாரோட கொண்டாடியிருக்காங்க தெரியுமா.. சூப்பர் போட்டோ இதோ!
மும்பை : நடிகை பூஜா ஹெக்டே இன்றைய தினம் தன்னுடைய 32வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
சமீபத்தில் தன்னுடைய சுற்றுலாக்களை வெளிநாட்டில் கொண்டாடிவிட்டு நாடு திரும்பிய இவர் இன்றைய தினம் சூட்டிங்கில் உள்ளார்.
பாலிவுட் ஹீரோ சல்மான் கானுடன் பூஜா ஹெக்டே தற்போது கிசி கா பாய் கிசி கி ஜான் படத்தில் நடித்து வருகிறார்.
என்னது ஆப்ரேஷன் செய்தேனா?அதற்கு அவசியமே இல்லை..பூஜா ஹெக்டே விளக்கம்!

நடிகை பூஜா ஹெக்டே
இந்திய அளவில் பிரபலமான நடிகையாக உள்ளார் பூஜா ஹெக்டே. தமிழில் ஜீவாவுடன் முகமுடி படத்தில் என்ட்ரி கொடுத்த பூஜா ஹெக்டே தொடர்ந்து தெலுங்கில் அடுத்தடுத்த படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறியுள்ளார். சமீபத்தில் தமிழில் வெளியான பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்திருந்தார் பூஜா ஹெக்டே.

வரவேற்பை கொடுத்த பீஸ்ட் படம்
முகமுடி படத்திற்கு பிறகு இந்த தமிழ் படத்தில் பூஜா ஹெக்டே நடித்திருந்த நிலையில், இந்தப் படத்தில் இவரது நடனம் மற்றும் நடிப்பு மிகச்சிறந்த வரவேற்பை பெற்றிருந்தது. படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்களிலும் விஜய்க்கு இணையான நடனத்தை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்திருந்தார் பூஜா ஹெக்டே.

பீஸ்ட் படத்தில் நடித்த பூஜா ஹெக்டே
பீஸ்ட் படத்தில் நடித்ததன்மூலம் மீண்டும் தமிழ்ப் படங்களில் அடுத்தடுத்து கமிட்டாக முடியும் என்று எதிர்பார்த்து பூஜா ஹெக்டே காத்திருந்த இந்தப்படம் கலவையான விமர்சனங்களை கொடுத்ததால் தமிழில் இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் இல்லாத சூழல் உருவாகியுள்ளது.

பாலிவுட்டில் பிசியான பூஜா ஹெக்டே
இதனிடையே பூஜா நடிப்பில் தெலுங்கிலும் ஆச்சார்யா உள்ளிட்ட அடுத்தடுத்தப் படங்கள் தோல்வியை அடைந்த நிலையில், தற்போது வெற்றியை கண்டிப்பாக கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் பூஜா உள்ளார். இந்நிலையில் பாலிவுட்டில் பிரபல நடிகர்கள் சல்மான் கான், ரன்வீர் சிங் உள்ளிட்டவர்களுடனும் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.

சல்மானுடன் பிறந்தநாள் கொண்டாட்டம்
சமீபத்தில் உலக சுற்றுலாவை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பூஜா ஹெக்டே தற்போது சல்மானுடன் இணைந்து கிசி கா பாய் கிளி கி ஜான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இன்றைய தினம் அவர் தனது பிறந்தநாளை கொண்டாடிவரும் சூழலில் சல்மான் கானுடன் இணைந்து தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

வாழ்த்து சொன்ன சல்மான்
படத்தின் சூட்டிங்கில் இருந்த அவர், சல்மான் மற்றும் வெங்கடேஷுடன் அவர் இந்த பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவர் மூன்று கேக்குகளை வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து சல்மான் கான், பூஜா கேக் வெட்டும் இந்த புகைப்படத்தை தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்து அவருக்கு வாழ்த்துக்களையும் பகிர்ந்துள்ளார்.

பிறந்தநாள் வீடியோ
இதனிடையே, சல்மான் கான் பிலிம்ஸ் நிறுவனமும் பூஜா ஹெக்டேவின் பிறந்தநாளையொட்டி வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளது. அதில் பூஜா ஹெக்டே கேக்குகளை வெட்ட, பக்கத்தில் இருந்துக் கொண்டு சல்மான் கான், beautiful, lovely என்று பாராட்டு தெரிவித்ததையும் காண முடிந்தது.