Pooja heegde: ரோலர் கோஸ்டர் வாழ்க்கை.. பூஜா ஹெக்டேவிற்கே இந்த நிலைமையா?

சென்னை: நடிகை பூஜா ஹெக்டே தமிழில் முகமூடி படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர். கடந்த 2012ம் ஆண்டில் வெளியான இந்தப் படத்தை மிஷ்கின் இயக்கியிருந்தார். ஜீவாவிற்கு ஜோடியாக இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இந்தப் படம் சிறப்பாக அமையாத நிலையில் தொடர்ந்து தெலுங்குப் படவுலகம் பூஜாவை அள்ளி அணைத்துக் கொண்டது.

அடுத்தடுத்து தெலுங்குப் படங்களில் நடித்த பூஜா ஹெக்டே இந்தியில் மொஹஞ்சதாரோ என்ற படத்தில் ஹிரித்திக் ரோஷனுக்கு ஜோடியானார். தொடர்ந்து தெலுங்கு, இந்தி மொழிப் படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துவந்த பூஜா ஹெக்டே மீண்டும் தமிழில் விஜய்க்கு ஜோடியாக பீஸ்ட் படம் மூலம் கடந்த 2021ம் ஆண்டில் ரீ என்ட்ரி கொடுத்தார்.

pooja hegde

நடிகை பூஜா ஹெக்டே: நடிகை பூஜா ஹெக்டே தமிழில் கடந்த 2012ம் ஆண்டில் வெளியான முகமூடி படத்தின்மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தவர். மிஷ்கின் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் ஜீவா ஹீரோவாக நடித்திருந்தார். படம் சொதப்பிய நிலையில் அடுத்தடுத்த படவாய்ப்புகள் பூஜாவிற்கு தமிழில் கிடைக்கவில்லை. இதையடுத்து தெலுங்குப்படவுலகம் இவரை சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்றது. வந்த வாய்ப்புகளை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். இதையடுத்து இந்தியிலும் ஹிரித்திக் ரோஷனுடன் மொஹஞ்சதாரோ படம் மூலம் என்ட்ரி கொடுத்தார். அடுத்தடுத்து சல்மான் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்துள்ளார்.

மீண்டும் விஜய்யுடன் ஜோடி: இதனிடையே, மீண்டும் தமிழில் நடிக்கும் வாய்ப்பு பீஸ்ட் படம் மூலம் பூஜா ஹெக்டேவிற்கு கிடைத்தது. கடந்த 2021ம் ஆண்டில் விஜய்யுடன் இணைந்து நடித்த பூஜா ஹெக்டே தற்போது மீண்டும் அவருடனேயே ஜன நாயகன் படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் இறுதிப்படமான இந்தப் படத்தில் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. இதனிடையே சூர்யா ஜோடியாக ரெட்ரோ படத்திலும் நடித்து முடித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் ரொமாண்டிக் மற்றும் ஆக்ஷன் ஜானரில் உருவாகியுள்ளதாக தெரிகிறது. இந்தியில் இவர் நடிப்பில் நேற்றைய தினம் தேவா படம் ரிலீசாகியுள்ளது.

12 ஆண்டுகளை பூர்த்தி செய்த பூஜா ஹெக்டே: இதனிடையே சினிமாவில் பூஜா ஹெக்டே என்ட்ரி கொடுத்து 12 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளார். இதையொட்டி ரசிகர்கள் பூஜா ஹெக்டேவிற்கு சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்னர். இதையொட்டி மகிழ்ச்சி தெரிவித்துள்ள பூஜா ஹெக்டே, இந்த 12 ஆண்டுகால சினிமா பயணத்தில் ரோலர் கோஸ்டரில் பயணம் செய்ததை போலத்தான் உணர்ந்ததாக தெரிவித்துள்ளார். அதில் வரும் ஏற்ற இறக்கம் போல சினிமாவிலும் வெற்றிகளையும் தோல்விகளையம் உயர்வையும் அதேபோல தாழ்வையும் தான் அதிகமாக சந்தித்துள்ளதாகவும் பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.

விஜய் -பூஜா ஹெக்டே ஜோடி: பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தாலும் விஜய் மற்றும் பூஜாவிற்கு அதிகமான காம்பினேஷன் காட்சிகள் இல்லாத சூழலே காணப்பட்டது. ஆனால் படத்தின் பாடல்களில் இருவருக்கும் சிறப்பான கெமிஸ்ட்ரி காணப்பட்டது. இந்நிலையில் மீண்டும் விஜய்யுடன் ஜனநாயகன் படத்தில் இணைந்துள்ளார் பூஜா ஹெக்டே. இந்தப் படத்தில் இவர்களின் கெமிஸ்ட்ரி வெளிப்படுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X