ரொம்ப தாராளம்.. தளபதி 65க்காக 50 நாட்கள் கால்ஷீட்டை அள்ளிக்கொடுத்த பிரபல நடிகை!

சென்னை: தளபதி 65 படத்துக்காக பிரபல நடிகை 50 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய்யின் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் பொங்கலை முன்னிட்டு மாஸ்டர் படம் ரிலீஸ் ஆனது.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. வசூலையும் குவித்து சாதனை படைத்தது.

நெல்சன் திலீப்குமார்

நெல்சன் திலீப்குமார்

இந்நிலையில் விஜய் தனது 65வது படத்தில் நடிக்கவுள்ளார். விஜய்யின் தளபதி 65 படத்தை கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்குகிறார். நெல்சன் கடைசியாக சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தை இயக்கியுள்ளார்.

ரஷ்யாவில் படப்பிடிப்பு

ரஷ்யாவில் படப்பிடிப்பு

வரும் 26ஆம் தேதி வெளியாக இருந்த இப்படம் தேர்தலை முன்னிட்டு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தளபதி 65 படத்துக்கான வேலையில் இறங்கியுள்ளார் நெல்சன். தளபதி 65 படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

50 நாட்கள் கால்ஷீட்

50 நாட்கள் கால்ஷீட்

இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்நிலையில் தளபதி 65 படத்துக்காக பூஜா ஹெக்டே 50 நாட்கள் கால் ஷீட் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் விஜய்யுடன் பூஜா ஹெக்டேவுக்கு ஏராளமான ரொமான்ஸ் காட்சிகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ட்ராங்க கம்பேக்

ஸ்ட்ராங்க கம்பேக்

நடிகை பூஜா ஹெக்டே தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்துள்ள பூஜா ஹெக்டே தற்போது தளபதி படத்தின் மூலம் ஸ்ட்ராங் கம்பேக் கொடுக்கவுள்ளார்.

விரைவில் ஷூட்டிங்

விரைவில் ஷூட்டிங்

அல்லு அர்ஜூனுடன் வைகுந்தபுரமுலு படத்தில் நடித்தப் பிறகு அவருக்கு தமிழ் சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியுள்ளது. தளபதி 65 படத்தின் ஷூட்டிங் ரஷ்யா மற்றும் சென்னையில் விரைவில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. அனிருத் இசையமைக்கவுள்ளார்.

சூடான சுவையான சினிமா மற்றும் தொலைக்காட்சி செய்திகளுக்கு பிலிமிபீட் தமிழ் இணையதளத்தின் டெலிகிராம் சானலுடன் இணைந்திருங்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X