Pooja Hegde: பூஜா ஹெக்டேவுடன் இணையும் டிமான்ட்டி காலனி இயக்குநர்.. என்ன சப்ஜெக்ட் தெரியுமா?

சென்னை: டிமான்ட்டி காலனி படம் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் அஜய் ஞானமுத்து. அடுத்ததாக விக்ரம் நடிப்பில் கோப்ரா படத்தை இயக்கியிருந்தார்.

தற்போது டிமான்ட்டி காலனி 2 படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துள்ளார் அஜய் ஞானமுத்து. சமீபத்தில் படத்தின் ட்ரெயிலர் வெளியாகி ஏராளமான ரசிகர்களை மிரட்டியது.

Actress Pooja hegde going to join with Demonte colony Director Ajay Gnanamuthu

விரைவில் இந்தப் படம் ரிலீசாகவுள்ள நிலையில் அடுத்ததாக பூஜா ஹெக்டே லீட் கேரக்டரில் நடிக்க புதிய படத்தை இயக்கவுள்ளார் அஜய் ஞானமுத்து.

இயக்குநர் அஜய் ஞானமுத்து: இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விரைவில் ரிலீசாகவுள்ளது டிமான்ட்டி காலனி படம். த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் அருள்நிதி, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்தப் படம் விரைவில் ரிலீசாகவுள்ள நிலையில் படத்தின் டிரெயிலர் சமீபத்தில் வெளியாகி மிரட்டியது. இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார் சாம் சிஎஸ். அவரது இசை இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. மேலும் படத்தின் ஒளிப்பதிவு, செட் வேலைகளும் ரசிகர்களை அதிகமாக கவர்ந்துள்ளது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிமான்ட்டி காலனி படம்: முன்னதாக கடந்த 2015ம் ஆண்டில் வெளியான டிமான்ட்டி காலனி படம் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு சிறப்பான விமர்சனங்களையும் வசூலையும் குவித்தது. அருள்நிதி, ராஜ்திலக் உள்ளிட்ட குறைவான கேரக்டர்களை கொண்ட இந்தப் படத்தை சிறப்பான திரைக்கதையால் சிறப்பாக கொடுத்திருந்தார் அஜய் ஞானமுத்து. பேய்க்கதைகளில் காமெடியை மிக்ஸ் செய்து, பேய்களுக்கான மவுசையே குறைக்கும்படியான படங்கள் வெளியான நிலையில், சைலண்டாக வெளியாகி மிகப்பெரிய மிரட்டல் அனுபவத்தை டிமான்ட்டி காலனி படம் கொடுத்தது.

விரைவில் ரிலீசாகும் டிமான்ட்டி காலனி 2: இந்நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தின் இரண்டாவது பாகம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸ் அறிவிக்கப்படாவிட்டாலும் படத்தின் பிரமோஷன்களை சிறப்பாக செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். முதல் பாகத்தை போலவே அஜய் ஞானமுத்து இந்தப் படத்தையும் மிரட்டலாக கொடுப்பார் என்று எதிர்பார்க்கலாம். இந்தப் படத்தை நிறைவு செய்துள்ள அவரின் அடுத்தப்படம் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. அடுத்ததாக அவர் ஏவிஎம் நிறுவனத்திற்காக புதிய படத்தை இயக்கவுள்ளார். படத்தில் பூஜா ஹெக்டே லீட் கேரக்டரில் நடிக்க கமிட்டாகியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பு: பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம் சமீப காலங்களாக படங்களை தயாரிக்காமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் தயாரிப்பில் களமிறங்கியுள்ளது. ஓடிடி தளத்திற்காக ஏவிஎம் நிறுவனம் பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் புதிய படத்தை தயாரிக்கவுள்ளது. இந்தப் படத்தில் இயக்குநராக அஜய் ஞானமுத்து கமிட்டாகியுள்ளார். ஹீரோயினை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படத்தில்தான் தற்போது பூஜா ஹெக்டே கமிட்டாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படம் தெலுங்கில் உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படம் தமிழிலும் டப்பிங் செய்யப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


நடிகை பூஜா ஹெக்டே: கோலிவுட்டில் முகமூடி படத்தின்மூலம் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. கடந்த ஆண்டில் விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்து இவர் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும் படத்தில் பூஜா ஹெக்டேவின் நடிப்பு மற்றும் நடனம் சிறப்பான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பாலிவுட், டோலிவுட்டில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பூஜா நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது அஜய் ஞானமுத்துவுடன் இணையவுள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுததியுள்ளது. பீஸ்ட் படத்தை தொடர்ந்து பூஜா ஹெக்டே தமிழில் ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால், தமிழில் அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்காமல் போனது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X