Actress Pooja Hegde: வில் மிஸ் யூ அஜி..பாட்டி இறந்த சோகத்தில் கண்ணீர் விட்ட பூஜா ஹெக்டே!
சென்னை: நடிகை பூஜா ஹெக்டே, தமிழில் முகமூடி படத்தில் அறிமுகமான நிலையில், தொடர்ந்து தெலுங்குப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறினார். இதையடுத்து விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து தமிழில் ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பீஸ்ட் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாத நிலையில், அவருக்கு அடுத்தடுத்த வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனிடையே பாலிவுட்டிலும் பூஜா ஹெக்டே, அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சல்மான் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.
தெலுங்கில் அல்லு அர்ஜூன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் அலா வைகுந்தபுரமுலோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் வரும் புட்டபொம்மா பாடல் இவருக்கு இந்திய அளவில் ஏராளமான ரசிகர்களை பெற்றுத்தந்தது. கோலிவுட், பாலிவுட்டிலும் படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றுத்தந்தது. ஆயினும் அவரது சமீபகால படங்கள் எதுவும் அவருக்கு சரியாக கைக்கொடுக்காததால் அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்புகள் கைநழுவி சென்று வருகிறது. தற்போது பாலிவுட்டில் ஷாகித் கபூருடன் பூஜா ஹெக்டே தேவா என்ற படத்தில் நடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் ஜோடி: இதையடுத்து விஜய்யுடன் நடித்த பீஸ்ட் படம் பூஜாவிற்கு சிறப்பாக கைக்கொடுக்கவில்லை. இந்தப் படத்திலும் பாடல்கள்மூலம் அதிகமாக ஸ்கோர் செய்திருந்தார் பூஜா. இருந்தபோதிலும் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனால் பூஜா ஹெக்டேவிற்கு தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் கிடைக்காத நிலை காணப்படுகிறது. இந்நிலையில் பாலிவுட்டிலும் சல்மான் கானுடன் பூஜா நடித்திருந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வசூலிலும் சொதப்பியது. தற்போது ஷாகித் கபூருடன் பாலிவுட்டில் தேவா என்ற படத்தில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே.
சொதப்பும் படங்கள்: அலா வைகுந்தபுரமுலு படத்திற்கு பிறகு அவரது படங்கள் தொடர்ந்து சொதப்பி வருகின்றன. இதனால் அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியாக எந்த வாய்ப்புகளும் சிறப்பாக அமையவில்லை. இந்நிலையில் அவரது வீட்டிலும் தற்போது சோக நிகழ்வு நடந்துள்ளது. பூஜா ஹெக்டேவின் பாட்டி உடல்நலக்குறைவு காரணமாக காலமாகியுள்ளார். இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ள பூஜா ஹெக்டே, வில் மிஸ் யூ அஜி என்று சோகமாக பதிவிட்டுள்ளார். தன்னுடைய பாட்டியுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.
பூஜா ஹெக்டே பாட்டி காலமானார்: பூஜா ஹெக்டே தொடர்ந்து அடுத்தடுத்த பிரச்சினைகளில் சிக்கி வருகிறார். அவரது படங்கள் தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், சமீபத்தில் வெளியாகியுள்ள மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பும் பூஜாவிற்கு முன்னதாக கைநழுவியது. இந்நிலையில், கடந்த மாத்தில் துபாய்க்கு சென்ற பூஜா ஹெக்டேவிற்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்ற அவருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இதை பூஜா ஹெக்டே மறுத்திருந்தார். இதனால் அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.


Click it and Unblock the Notifications











