அதுக்கு எந்த தகவலையும் அனுப்பாதீங்க.. இன்ஸ்டா கணக்கை ஹேக் செய்த மர்மநபர்கள்.. பிரபல நடிகை அதிர்ச்சி

By

சென்னை: பிரபல நடிகையின் இன்ஸ்டாகிராம் கணக்கை மர்ம நபர்கள் சிலர் ஹேக் செய்துள்ளனர்.

மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில், ஜீவா ஜோடியாக நடித்தவர் பூஜா ஹெக்டே. பிறகு தமிழில் வாய்ப்பு கிடைக்கவில்லை.

தெலுங்கில் கவனம் செலுத்தி வரும் பூஜா ஹெக்டே, இந்தியிலும் நடிக்கத் தொடங்கினார். தெலுங்கில் இவர் நடித்த சில படங்கள் தொடர்ந்து ஹிட்டானது.

அலா வைகுந்தபுரம்லோ

அலா வைகுந்தபுரம்லோ

சமீபத்தில் அல்லு அர்ஜூன் ஜோடியாக, அலா வைகுந்தபுரம்லோ படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து அங்கு டாப் ஹீரோக்கள் ஜோடியாக நடித்து வருகிறார். பிரபாஸ் நடிக்கும் பிரமாண்ட படத்தில், அவர் ஜோடியாக நடித்து வருகிறார். இது பீரியட் படம். கே.கே. ராதாகிருஷ்ணா இயக்கி வருகிறார். இன்னும் டைட்டில் வைக்கவில்லை.

கபி ஈத் கபி தீவாளி

கபி ஈத் கபி தீவாளி

லாக்டவுனுக்கு முன், இதன் படப்பிடிப்புக்காக நடிகை பூஜா, ஜார்ஜியா சென்று வந்திருந்தார். தமிழ், தெலுங்கு, இந்தியில் இந்தப் படம் உருவாகிறது. இந்தியில் சல்மான்கான் ஜோடியாக, கபி ஈத் கபி தீவாளி (Kabhi Eid Kabhi Diwali) என்ற படத்தில் நடிக்கிறார். தமிழில் சில படங்களில் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கடந்த சில நாட்களுக்கு முன் கூறியிருந்தார்.

சோசியல் மீடியா

சோசியல் மீடியா

லாக்டவுன் காரணமாக, படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் நடிகர், நடிகைகள் வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இந்த நேரத்தில் அவர்களின் ஒரே பொழுதுபோக்கு, வீடியோ மற்றும் புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக இருக்கிறது. சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் பூஜா ஹெக்டேவும் ஒருவர். அவருக்கு பத்து மில்லியனுக்கும் அதிகமான பாலோயர்கள் உள்ளனர்.

ஏற்கவேண்டாம்

ஏற்கவேண்டாம்

இந்நிலையில். தனது இன்ஸ்டாகிராம் கணக்கு ஹேக் செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார் பூஜா ஹெக்டே. இதுபற்றி தனது ட்விட்டரில், 'எனது இன்ஸ்டாகிராம் கணக்கை சில முடக்கியுள்ளனர். எனது டிஜிட்டல் டீம் அதை மீட்க உதவி வருகிறது. அதில் இருந்து வரும் எந்த அழைப்பையும் ஏற்கவேண்டாம். அந்த கணக்கில் இருந்து கேட்பவருக்கு எந்த தனிப்பட்ட தகவலையும் அனுப்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

Recommended Video

இசையில்லாமல் நடனம்..அசத்தும் ஹீரோயின்..வியக்கும் ரசிகர்கள்! - வீடியோ
நடிகர், நடிகைகள்

நடிகர், நடிகைகள்

நடிகர், நடிகைகள் உள்ளிட்ட பிரபலங்களின் சமூக வலைத்தளக் கணக்குகளை குறிவைத்து அதை முடக்கும் வேலைகளில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். பல நடிகர், நடிகைகளின் சமூக வலைத்தளக் கணக்குகள் இப்படி ஹேக் செய்யப்பட்டுள்ளன. சமீபத்தில் அபர்ணா பாலமுரளி, இந்தி நடிகை ஊர்வசி ரவ்தேலா, நடிகை ஷோபனா உள்ளிட்டோரின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டிருந்தன. இப்போது பூஜா ஹெக்டே கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X