Pooja Hegde: நீச்சல் உடையில் பூஜா ஹெக்டே.. லைக் செய்த முன்னணி நடிகை!
சென்னை: நடிகை பூஜா ஹெக்டே கடந்த 2012ம் ஆண்டில் வெளியான முகமூடி படம் மூலம் அறிமுகமானவர்.
தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் இல்லாத நிலையில், தெலுங்கில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக மாறினார்.

இதையடுத்து தமிழில் இவருக்கு மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. விஜய்யுடன் இணைந்து பீஸ்ட் படத்திலும் நடித்துள்ளார் பூஜா ஹெக்டே.
மாலத்தீவில் விடுமுறை கொண்டாட்டத்தில் பூஜா ஹெக்டே: நடிகை பூஜா ஹெக்டே முகமூடி படம் மூலம் கடந்த 2012ம் ஆண்டில் தமிழில் ஜீவாவிற்கு ஜோடியாக அறிமுகமானார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், தமிழில் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைக்காமல் தெலுங்குக்கரையோரம் ஒதுங்கினார் பூஜா ஹெக்டே. பல முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். இதன்மூலம் மீண்டும் தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கும் வாய்ப்பு பூஜா ஹெக்டேவிற்கு கிடைத்தது.
விஜய் ஜோடியாக கடந்த ஆண்டில் வெளியான பீஸ்ட் படத்தில் நெல்சன் இயக்கத்தில் நடித்திருந்தார் பூஜா ஹெக்டே. இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனால் பூஜாவிற்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இந்தப் படத்தை மிகவும் எதிர்பார்த்து காத்திருந்தார் பூஜா. ஆனால் இந்தப் படத்தின் ரிசல்ட் அவருக்கு ஏமாற்றங்களையே கொடுத்துள்ளது.
தற்போது தெலுங்கு, இந்திப் படங்களில் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே, சமீபத்தில் வீரம் படத்தின் ரீமேக்கில் இந்தியில் பூஜா ஹெக்டே நடித்திருந்தார். இந்தப் படத்தின் லீட் கேரக்டரில் சல்மான் கான் நடித்திருந்தார். இந்தப் படமும் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், அடுத்தப்படத்தின் வெற்றிக்காக காத்திருக்கிறார். தமிழிலும் அடுத்தப்பட வாய்ப்பிற்காக காத்திருக்கிறார். இதனிடையே சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார்.

அடுத்தடுத்த வீடியோக்கள், புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிட்டு ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரது ஒவ்வொரு பதிவும் ஏறக்குறைய மில்லியன் லைக்ஸ்களை தொடர்ந்து பெற்று வருகின்றன. மேலும் இவர் இன்ஸ்டாகிராமில் 24.5 மில்லியன் பாலோயர்களை பெற்றுள்ளார். தற்போது மாலத்தீவில் சுற்றுலா கொண்டாட்டத்தில் உள்ள பூஜா ஹெக்டேவின் அடுத்தடுத்த புகைப்படங்கள், வீடியோக்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
இதனிடையே மாலத்தீவில் இருந்தபடி அடுத்தடுத்த நீச்சல் உடை புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார் பூஜா ஹெக்டே. மாலத்தீவின் ரெசார்ட் ஒன்றில் இருந்தபடி ரிலாக்ஸ் செய்துவரும் பூஜா ஹெக்டே, பச்சை நிற ஸ்விம்மிங் சூட்டில் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படத்திற்கு ஏறக்குறைய மில்லியன் லைக்ஸ் கிடைத்துள்ள நிலையில் நடிகை தமன்னாவும் லைக் செய்துள்ளார். முன்னதாக அங்கிருந்தபடி தன்னுடைய பிறந்தநாளையும் இரு தினங்களுக்கு முன்பு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அதன் புகைப்படங்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.


Click it and Unblock the Notifications











