Actor Suriya: சூர்யாவுடன் ஜோடி சேரும் விஜய் பட நாயகி.. அறிவித்த இயக்குநர்!
சென்னை: நடிகர் சூர்யா, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடிக்கவுள்ள படம் சூர்யா 44. இந்தப் படத்தில் வில்லனாக உறியடி நாயகன் விஜயகுமார் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் அந்தமானில் துவங்கவுள்ளது. இந்த படத்தின் சூட்டிங்கை முன்னிட்டு முன்னதாக காளிகாம்பாள் கோயிலில் நடிகர் சூர்யா சாமி தரிசனம் செய்ததை பார்க்க முடிந்தது.
அந்தமானின் ஹார்பரில் இநதப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ள சூழலில், தொடர்ந்து ஒரு மாத காலங்கள் இந்தப் படத்தின் சூட்டிங் அங்கு நடக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் நாயகி குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை நடிகர் சூர்யாவும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜூம் இணைந்து தயாரிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யாவின் நடிப்பில் கங்குவா படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளது. இயக்குநர் சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சூர்யாவுடன் இந்தப் படத்தில் திஷா பதானி, பாபி தியோல் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். சர்வதேச அளவில் இந்தப் படம் 10 மொழிகளில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் டீசர் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ள சூழலில் அடுத்த மாதத்தில் மீண்டும் டீசர் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டடடுள்ளது. இந்தப் படத்தில் 10க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் சூர்யா நடித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூர்யா 44 படம்: இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா இணையவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுடன் சூர்யா 44 படத்தில் இணைந்துள்ளார் சூர்யா. இந்தப் படத்தில் சூர்யாவுடன் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடிக்கவுள்ள சூழலில் படத்தின் வில்லனாக உறியடி படம் மூலம் கவனம் பெற்ற நடிகர் விஜயகுமார் இணைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல இந்தப் படத்தின் நாயகியாக நடிகை பூஜா ஹெக்டே இணைந்துள்ளார். தற்போது இதுகுறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் அதிகாரப்பூர்வமாக தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அந்தமானில் சூட்டிங்: நடிகர் சூர்யா மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இருவரும் இணைந்து தயாரிக்கவுள்ள சூர்யா 44 படத்தின் சூட்டிங் அந்தமானில் துவங்கவுள்ளது. இதற்காக படக்குழுவினர் அந்தமான் புறப்பட்டு சென்றுள்ளனர். அங்கு ஹார்பரில் முதல்கட்ட சூட்டிங் நடத்தப்பட உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்தப் படத்தின் சூட்டிங் அந்தமானில் ஒரு மாத காலம் நடக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் சூட்டிங்கிற்கு முன்னதாக நடிகர் சூர்யா, காளிகாம்பாள் கோயிலில் சாமி தரிசனம் செய்ததை பார்க்க முடிந்தது. இந்தப் படத்தின் டைட்டில் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் கமிட்டாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்த படங்கள்: இந்நிலையில் சூர்யா, ஜெயராம் உள்ளிட்ட படக்குழுவினர் அந்தமான் சென்று சேர்ந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படஙகளில் சூர்யா நடிக்கவுள்ள நிலையில், அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரோலக்ஸ் படத்தில் அவர் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.இதையடுத்து சூர்யா 44 படத்தின் சூட்டிங்கை துரிதப்படுத்த இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது,


Click it and Unblock the Notifications











