புட்ட பொம்மா நாயகிக்கு அடித்த ஜாக்பாட்.. விஜய்யை தொடர்ந்து சூர்யாவுக்கும் ஜோடி?
சென்னை: தளபதி 65 படத்தை தொடர்ந்து சூர்யா படத்திலும் நடிகை பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக தவகல் வெளியாகியுள்ளது.
நடிகை பூஜா ஹெக்டே தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
அதன்பிறகு தமிழ் சினிமாவில் தலைக்காட்டவில்லை பூஜா ஹெக்டே. இருப்பினும் தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் பிஸியாக நடித்து வந்தார்.

புட்ட பொம்மா
அல்லு அர்ஜூனுடன் வைகுந்தபுரமுலு படத்தில் நடித்தப் பிறகு அவருக்கு தமிழ் சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியுள்ளது. இந்தப் படத்தில் இடம் பெற்ற புட்ட பொம்மா பாடல் பெரும் வரவேற்பை பெற்றது.

2 ஹீரோயின்கள்
இந்நிலையில் விஜய்யின் தளபதி 65 படத்தில் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். மலையாள நடிகை அபர்ணா தாஸும் இந்தப் படத்தில் நடித்து வரும் நிலையில் இரண்டு ஹீரோயின்களில் ஒருவராக பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

சூர்யாவுக்கு ஜோடி?
படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக ஜார்ஜியா சென்றுள்ளார் பூஜா ஹெக்டே. இந்நிலையில் பூஜா ஹெக்டே மேலும் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது நடிகை பூஜா ஹெக்டே நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

சிவா இயக்கத்தில்
நடிகர் சூர்யா தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடி வாசல் படத்தில் நடிக்கவுள்ளார். அதனை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.
Recommended Video

அறிவிப்பு வெளியாகவில்லை
இந்தப் படத்தில் தான் நடிகை பூஜா ஹெக்டே சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கிறாராம். ஆனால் இந்த தகவல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











