கார்த்திக் சுப்புராஜ் லவ் ஸ்டோரி எழுதினா எப்படியிருக்கும்.. சூர்யா 44 படம்குறித்து பேசிய பூஜா ஹெக்டே
சென்னை: நடிகர் சூர்யா -இயக்குநர் சிவா கூட்டணியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி உள்ளது கங்குவா. இரண்டரை ஆண்டுகள் மிகுந்த மெனக்கெடல்களுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த படம் எதிர்பார்த்த அளவில் வரவேற்பையும் வசூலையும் பெற தவறியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா.
சூர்யா 44 படம் ரொமான்டிக் மற்றும் அதிரடி ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே களமிறங்கியுள்ளார். கங்குவா படம் சூர்யாவிற்கு சரியான வரவேற்பை பெற்றுக் கொடுக்காத நிலையில் சூரியா 44 அவருக்கு கை கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

சூர்யா 44 படம்: நடிகர் சூர்யாவின் கங்குவா படம் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி மிகவும் மோசமான விமர்சனங்களை பெற்று வருகிறது/ படத்தின் வசூலும் இரண்டாவது நாளிலேயே மிகவும் குறைந்துள்ளது. படத்தில் கதையே இல்லை என்ற விமர்சனங்களை இந்த படம் பெற்று வருகிறது. ஆயினும் கங்குவா படம் குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பாசிட்டிவ்வாகவே பேசி வருகிறார். படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி ரசிகர்களை கவர்ந்து உள்ளதாகவும் ஹிந்தி மொழியிலும் சிறப்பான அப்டேட்களை பெற்று வருவதாகவும் அவர் நேற்றைய தினம் கூறியதை பார்க்க முடிந்தது.
சூர்யா 44 படம்: இந்நிலையில் இந்த படத்தின் சூட்டிங்கை முன்னதாக நிறைவு செய்துவிட்டு அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. அடுத்ததாக ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார். இதனிடையே, சூர்யா44 படம் ரொமான்ஸ் மற்றும் அதிரடி ஆக்ஷன் கதையை மையமாக வைத்து உருவாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து முடித்துள்ளார். தமிழில் விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்த அவர் தொடர்ந்து சூர்யாவுடன் இந்தப் படத்தில் இணைந்துள்ளார்.
சூர்யா 44 டைட்டில் எப்போது?: இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய்யுடனே தளபதி 69 படத்தில் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்நிலையில் சூர்யா 44 படம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தின் சூட்டிங் முற்றிலுமாக நிறைவடைந்து படத்தின் போஸ்ட் புரொடக்ஷன்ஸ் வேலைகளை படக்குழுவினர் துரிதப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் டைட்டிலை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். கங்குவா படத்தின் ரிலீசையடுத்து உற்சாகமாக இந்த டைட்டிலை சூர்யா வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது கங்குவா படத்தின் நெகட்டிவ் ரிசல்ட் அவருக்கு மட்டுமில்லாமல் அவரது ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
சூர்யா அதிரடி பிளான்: இதனால் சூர்யா 44 படத்தின் டைட்டில் வெளியாவதில் காலதாமதம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படம் குறித்து பேசி உள்ள படத்தின் நாயகி பூஜா ஹெக்டேவிடம் படத்தின் கதை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர் நேரடியாக பதில் அளிக்காமல் கார்த்திக் சுப்புராஜ், லவ் ஸ்டோரி எழுதினால் எப்படி இருக்கும் அப்படி சூர்யா 44 படத்தின் கதை அமைந்துள்ளதாக கூறியுள்ளார். எதற்கும் துணிந்தவன் படத்திற்கு பிறகு இரண்டரை ஆண்டுகள் ஒரே படத்தில் கவனம் செலுத்தி கங்குவா படத்தை வெளியிட்டுள்ளார் நடிகர் சூர்யா. இதையடுத்து அடுத்தடுத்த படங்களில் அவர் குறைந்த இடைவெளிகளிலேயே நடித்து முடிக்க திட்டமிட்டுள்ளார்.
லவ் ஸ்டோரியை இயக்கிய கார்த்திக் சுப்புராஜ்: இந்நிலையில் தொடர்ந்து கேங்ஸ்டர் கதைக்களங்களை இயக்கிவந்த கார்த்திக் சுப்புராஜ் ரொமான்டிக் ஜானரில் சூர்யா 44 படத்தை எடுத்துள்ளார். முன்னதாக கமர்சியல் படங்களை எடுத்து வந்த இயக்குனர் சிவா வரலாற்று ஜானரில் தன்னை வெளிப்படுத்திய கங்குவா படம் சொதப்பலாக அமைந்துள்ளது. இதேபோல கேங்ஸ்டர் கதைக்களத்தில் அடுத்தடுத்த படங்களை கொடுத்து வந்த கார்த்திக் சுப்புராஜ் தற்போது ரொமான்டிக் ஜானரில் சூர்யா 44 படத்தை எடுத்துள்ளார்.
பரிசோதனை முயற்சிகள்: இந்த படம் சூர்யாவிற்கு சிறப்பாக அமையுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனிடையே பரிசோதனை முயற்சிகள் அனைத்திலும் சூர்யாவே சிக்கி வருவதாகவும் அவருக்கு அவை அனைத்துமே கை கொடுப்பதில்லை என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். சூர்யா 44, சூர்யாவிற்கு தலைநிமிர்வை கொடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.


Click it and Unblock the Notifications











