வில்லுப் போல வளையும் .. புட்டபொம்மா அழகி.. அட்டகாசமான புகைப்படம் !

மும்பை: பூஜா ஹெட்டே வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் குஷியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக க்யூட்டான படங்களை வெளியிடும் இவர் இப்போது வில்லாக வளையும் ஒரு படத்தை பகிர்ந்துள்ளார்.

புட்டபொம்மா..புட்டபொம்மா என்ற பாடல் தெலுங்கு திரையுலகில் மட்டு மல்லாமல் சர்வதேச அளவிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுத்தந்தது. இந்த பாடலில் அல்லு அர்ஜூன் மற்றும் பூஜா ஹெட்டே நடனம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

பூஜா ஹெட்டே வெளியிடும் அனைத்து புகைப்படத்திற்கும் நல்ல வரவேற்பு பெற்று வந்த நிலையில் சமீபத்தில் அவர் உடற்பயிற்சி செய்யும் புகைப்படம் ஒன்று வைரலாக பரவுகின்றது.

சமந்தாவுடன் லாக்

சமந்தாவுடன் லாக்

சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் ஐடி ஹேக் செய்யப்பட்ட பின் சமந்தாவுடனான ட்ரோல்கள் மோதல்கள் என தனக்கு ஏற்பட்ட பல பிரச்சனைகளுக்கு பின் இப்போது மீண்டும் பூஜா தனது இன்ஸ்டாவில் வழக்கம் போல் தனது படங்களை அப்டேட் செய்து வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படங்களுக்கென்றே தனி ரசிகர்கள் இருந்து கொண்டு தான் இருக்கின்றனர்.

தெலுங்கில் பிரபலம்

தெலுங்கில் பிரபலம்

தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமான இவர் அந்த படம் சரியாக கைகொடுக்காததால், அப்படியே தெலுங்கு பக்கம் போய்விட்டார். அங்கு இவருக்கு தொடர்ந்து படங்கள் ஹிட் அடித்து வந்த நிலையில். இப்போது சமீபத்தில் வெளியான அலா வைகுண்டபுரமுலோ, அல்லு அர்ஜூன் உடன் ஜோடி சேர்ந்தார். அந்த படத்தில் வெளியான புட்ட பொம்மா என்ற பாடலின் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமாகி விட்டார் பூஜா.

வில்லாக வளையும் உடல்

வில்லாக வளையும் உடல்

ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் பூஜா வித விதமாக யோகா செய்வதுடன் உடற்பயிற்சி செய்வதுமாக இருக்கிறார். இவர் சமீபத்தில் யோகா செய்யும் ஒரு படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அதில் அவர் உடலை வில்லாக வளைத்து போஸ் கொடுத்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள் வாயை பிளந்து வருகின்றனர். மேலும் பல ரசிகர்கள் அவருக்கு இதயத்தை பரிசாக கொடுத்துள்ளனர்.

Recommended Video

Samantha is Not PRETTY at all • Pooja Hedge • Oh Baby • Nandhini Naidu
பூஜா தரிசனம்

பூஜா தரிசனம்

அதை பார்த்து பலரும் அவரை பாராட்டி வரும் வேளையில் சிலர் இந்த அக்கவுண்ட் மறுபடியும் ஹேக் செய்யபட்டு விட்டதா என குழம்பியும் வருகின்றனர். எது எப்படியோ பூஜாவின் தரிசனம் நமக்கு கிடைச்சா போதும் என அவர்கள் அந்த படத்தை சந்தோசமாக பகிர்ந்து வருகின்றனர். அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டவுடன் இவர் தனது படங்களை பார்க்க முடியாத ஏக்கத்தில் இருந்தவர்கள் இப்போது தான் பெருமூச்சு விட்டுள்ளனர். மேலும் இவரது அப்கமிங் படங்களான most eligible Bachelor மற்றும் Jaan போன்ற இரண்டு தெலுங்கு படங்கள் இன்னும் சில மாதங்களில் வெளியாக தயாராகி கொண்டு உள்ளன. இந்த ஊரடங்கு முடிவுக்கு வந்த பிறகு தான் அதனை பற்றிய அதிகார பூர்வ அறிவிப்பு நமக்கு கிடைக்கும் .

More from Filmibeat

Read more about: pooja hegde yoga யோகா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X