20 நாட்கள் ஒரே காஸ்ட்யூம்... நெல்சன் மட்டும்தான் காஸ்ட்யூம் மாத்துவாரு.. பூஜா கலகல!

ஐதராபாத் : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படம் வரும் 13ம் தேதி சர்வதேச அளவில் திரையிடப்பட உள்ளது. இந்தப் படத்திற்காக ரசிகர்கள் கொல மாசுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் பல மொழிகளில் படத்திற்கான பிரமோஷன்கள் நடந்து வருகின்றன.

விஜய்யின் பீஸ்ட்

விஜய்யின் பீஸ்ட்

நடிகர் விஜய், பூஜா ஹெக்டே, யோகிபாபு, அபர்ணா தாஸ் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து வரும் 13ம் தேதி வெளியாகவுள்ளது பீஸ்ட். இந்தப் படம் சர்வதேச அளவில் வெளியாகவுள்ள நிலையில், இந்திய அளவில் 5 மொழிகளில் ரிலீசாக உள்ளது.

பான் இந்தியா ஹீரோ

பான் இந்தியா ஹீரோ

இந்தப் படம் மூலம் பான் இந்தியா நாயகனாக மாறியுள்ளார் விஜய். தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் படம் ரிலீசாக உள்ளது. தமிழில் படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெயிலர் வெளியாகி மாஸ் காட்டி வருகிறது. தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது.

சிறப்பான பாடல்கள்

சிறப்பான பாடல்கள்

முன்னதாக படத்தின் 2 பாடல்கள் மற்றும் ட்ரெயிலர் வெளியாகி கோடிக்கணக்கான வியூஸ்களை பெற்றுள்ளது. ரசிகர்கள் கொண்டாடி வந்தனர். இந்நிலையில் தற்போது 3வது பாடலும் வெளியாகியுள்ளது. இந்தப் பாடல் வரிகளை விவேக் எழுதியுள்ள நிலையில் அனிருத் பாடியுள்ளார். முந்தைய பாடல்கள் உற்சாக கொண்டாட்டமாக அமைந்த நிலையில், இந்தப் பாடல் தீம் பாடலாக வெளியாகியுள்ளது.

தெலுங்கு பிரமோஷன்கள்

தெலுங்கு பிரமோஷன்கள்

இந்நிலையில் படத்தின் தெலுங்கு ரிலீசுக்கான பிரமோஷன்களில் படக்குழு ஈடுபட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்காத நிலையில், பூஜா ஹெக்டே, அனிருத், நெல்சன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். இதனிடையே, பூஜா, நெல்சன் ஆகியோர் அளித்துள்ள பேட்டியும் சிறப்பான வகையில் அமைந்துள்ளது.

பூஜா ஹெக்டே பேட்டி

பூஜா ஹெக்டே பேட்டி

இந்தப் பேட்டியில் பூஜா கலகலப்பாக பேசியுள்ளார். பீஸ்ட் படத்திற்காக போடப்பட்ட மால் செட்டில் 20 நாட்கள் சூட்டிங் நடைபெற்றதாகவும் அதில் ஒரே காஸ்ட்யூமில் அனைவரும் பங்கேற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் தினந்தோறும் காஸ்ட்யூம் மாற்றி நெல்சன் மட்டுமே அங்கு காணப்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Recommended Video

Manmatha leelai | Samyuktha Hegde | Riya Suman | ரொம்ப Enjoy பண்ணி நடிச்சோம் | Filmibeat Tamil
நெல்சனின் தன்னம்பிக்கை

நெல்சனின் தன்னம்பிக்கை

தொடர்ந்து பேசிய அவர், நெல்சன் மிகவும் தன்னம்பிக்கையான டைரக்டர் என்று பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தப் படத்தில் பொதுமக்களை ஷாப்பிங் மாலில் கடத்தும் தீவிரவாதிகளிடம் இருந்து அவர்களை மீட்கும் ரா ஏஜெண்டாக வீரராகவன் என்ற கேரக்டரில் விஜய் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X