Actress Pooja hegde: சம்பளத்தை தாறுமாறாக உயர்த்திய பூஜா ஹெக்டே.. முதல் பட சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சென்னை: நடிகை பூஜா ஹெக்டே தமிழில் மிஷ்கின் இயக்கத்தில் முகமுடி படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்திருந்தார். தொடர்ந்து அவருக்கு தமிழில் வாய்ப்புகள் அதிகமாக கிடைக்காத நிலையில் தெலுங்கு கரையோரம் ஒதுங்கினார். அவரை தெலுங்கு திரையுலகம் அள்ளி எடுத்துக்கொண்டது. தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டில் வெளியான விஜய்யின் பீஸ்ட் படத்தில் அவருக்கு ஜோடி போட்டு நடித்திருந்தார் பூஜா ஹெக்டே. இந்நிலையில் அவர் மீண்டும் தற்போது சூர்யாவுடன் சூர்யா44 படத்தில் இணைந்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். படத்தின் சூட்டிங் இம்மாதம் துவக்கத்தில் அந்தமானில் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

நடிகை பூஜா ஹெக்டே: நடிகை பூஜா ஹெக்டே தமிழில் முகமூடி படம் மூலம் என்ட்ரி கொடுத்தவர். மிஷ்கின் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் அவர் நடிகர் ஜீவாவிற்கு ஜோடி சேர்ந்து நடித்திருந்தார். இந்த படத்தில் அவருக்கு 30 லட்சம் ரூபாய் சம்பளமாக கொடுக்கப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து அவருக்கு தமிழில் வாய்ப்புகள் இல்லாத நிலையில் தெலுங்கு திரையுலகம் அவரை வாரி அணைத்துக் கொண்டது. முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களில் அவர் நடித்துள்ளார். இதையடுத்து மீண்டும் நடிகர் விஜய்யுடன் கடந்த 2022ம் ஆண்டில் வெளியான பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார் பூஜா ஹெக்டே.
சூர்யா 44 படம்: பீஸ்ட் படம் கலவையான விமர்சனங்களை பெற்றபோதிலும் பூஜாவின் கேரக்டரும் படத்தில் விஜய்க்கு இணையாக அவர் பாடல்களில் போட்ட ஆட்டமும் மிகச் சிறப்பான விமர்சனங்களை மற்றும் வரவேற்பை பூஜாவிற்கு பெற்று தந்தது. தொடர்ந்து மீண்டும் தமிழில் வாய்ப்புகள் இல்லாத சூழலில் தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வந்தார். ஆயினும் அவரது அடுத்தடுத்து ஏழு படங்கள் தோல்வியை சந்தித்தன. இதில் சல்மானுடன் பாலிவுட்டில் நடித்திருந்த கிஷி கா பாய் கிஷி கி ஜான் படமும் ஒன்று. இந்நிலையில் தற்போது மீண்டும் சூர்யாவுடன் சூர்யா 44 படத்தில் இணைந்துள்ளார் பூஜா ஹெக்டே.
பூஜா ஹெக்டே சம்பளம்: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் சூட்டிங் தற்போது அந்தமானில் நடந்து வரும் சூழலில் படப்பிடிப்பில் பூஜா ஹெக்டேவும் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு இந்த படத்தில் வழங்கப்பட்ட சம்பளம் குறித்த தகவல்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இந்த படத்திற்காக அவர் நாலு கோடி ரூபாய் வரை சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவரது முந்தைய படங்களில் 3 கோடி, 3.5 கோடி என சம்பளம் பெற்ற நிலையில் தற்போது சூர்யா படத்திற்காக நான்கு கோடி ரூபாயாக தன்னுடைய சம்பளத்தை உயர்த்தியுள்ளார் பூஜா ஹெக்டே.
தொடர் தோல்வி: பூஜா ஹெக்டேவின் அடுத்தடுத்த படங்கள் தோல்வியை சந்தித்த போதிலும் அவரது சம்பளம் அரை கோடி ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது இந்நிலையில் சூர்யாவுடனான படம் அவருக்கு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். இதன் மூலம் மீண்டும் விட்ட இடத்தை அவர் பிடிப்பார் என்றும் சம்பளத்தை தாறுமாறாக உயர்த்துவார் என்றும் யூகிக்கப்படுகிறது. முன்னதாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. இதேபோல சூர்யா 44 படமும் ரசிகர்களை கவரும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











