அணிலுடன் கொஞ்சி விளையாடும் பிரபல நடிகை.. வைரலாகும் வீடியோ!
ஹைதராபாத் : தற்போதைக்கு தெலுங்கு திரைப்படத் துறையில் அதிக ரசிகர் கூட்டத்தைக் கொண்டு பிரபலமாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகைகளில் முதன்மையானவர் நடிகை பூஜா ஹெக்டே.
தமிழில் முகமூடி திரைப்படத்திற்கு பிறகு வேறு எந்த திரைப்படங்களில் நடிக்காமல் இப்போது தெலுங்கில் ஆதிக்கம் செலுத்தி வரும் இவர் சமீபத்தில் வெளியான அலா வைகுண்டபுரம்லோ என்ற திரைப்படத்தில் நடித்து நடனம் ஆடி அசத்தியதன் மூலம் இப்போது உலகம் முழுவதும் பிரபலமாகியுள்ளார்.
தனது நளினமான நடிப்பின் மூலம் அனைவரையும் கொள்ளை அடித்து வரும் பூஜா ஹெக்டே இப்பொழுது அணிலுக்கு உணவு கொடுத்த வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

ஆகா ஓகோ
சினிமாவை பொறுத்த வரையிலும் எது வெற்றி பெறும் எது வெற்றி பெறாது என கணிக்கவே முடியாது. அது அந்தந்த கால கட்டத்தையும் ரசிகர்களின் மன ஓட்டத்தையும் பொருத்து சில திரைப்படங்கள் ஆகா ஓகோ என கொண்டாடப்பட்டு வருகின்றன.

புட்ட பொம்மா பாடல்
இந்த வகையில் சமீபத்தில் தெலுங்கு திரைப்படத் துறையை வசூல் மழையால் நனைய வைத்த திரைப்படங்களில் ஒன்று அலா வைகுண்டபுரம்லோ. அல்லு அர்ஜுனனின் அதிரடியான ஆக்ஷன் பேக் திரைப்படமாக உருவாகி இருந்த இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து இருக்க இதில் வரும் புட்ட பொம்மா பாடல் உலகம் முழுவதும் பிரபலமாகி மிகப்பெரிய வைரல் ஆனது.

அனைவரையும் ஆட வைத்த
புட்ட பொம்மா பாடலுக்கு அல்லு அர்ஜுன் மற்றும் பூஜா இருவரும் இணைந்து போட்ட ரசிக்கவைக்கும் க்யூட்டான நடனம் இன்று வரை பலரையும் ரசிக்க வைத்து அனைவரையும் ஆட வைத்த நிலையில் பூஜாவை பலரும் புட்ட பொம்மா என அழைத்து வருகின்றனர்.

பிரம்மாண்ட திரைப்படம்
அலா வைகுண்டபுரம்லோ வெற்றிக்குப் பிறகு இப்பொழுது நடிகர் பிரபாஸ் உடன் இணைந்து ராதே ஷ்யாம் என்ற பிரம்மாண்ட திரைப்படத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று அனைவரையும் ரசிக்க வைத்து வைரலாகி வருகிறது.

நான்கு முறை தோல்வி
அமைதியான காட்டுக்குள் அணில் ஒன்றுக்கு வெட்கப்பட்டுக் கொண்டே பூஜா உணவு கொடுக்க அதை லாவகமாக கைப்பற்றிக் கொண்ட அந்த அணில் மகிழ்ச்சியுடன் ஆட்டம் போட்டவாறு திரும்பிச் சென்றது. பூஜா ஹெக்டே நான்கு முறை அதற்கு உணவு கொடுக்க முயற்சித்தும் பதட்டத்தாலும் பயத்தாலும் அது தோல்வியில் முடிய ஐந்தாவது முறையாக வெற்றிகரமாக அணிலுக்கு உணவு கொடுத்துவிட்டேன் என துள்ளி குதித்தவாறு பூஜா ஹெக்டே வெளியிட்டிருக்கும் இந்த க்யூட்டான வீடியோ அனைவரையும் ரசிக்க வைத்த நிலையில், இந்த வீடியோவில் வரும் ஆடியோவை மியூட் செய்து பதிவிட்டு இருந்த பூஜாவிடம் ரசிகர் ஒருவர் ஆடியோ உடன் இந்த வீடியோவை மீண்டும் வெளியிடுமாறு பூஜாவிடம் பெட்டிஷன் ஒன்றை கொடுத்துள்ளது அவரை குலுங்க குலுங்க சிரிக்க வைத்துள்ளது..


Click it and Unblock the Notifications











