எனக்கு ரொம்ப பிடிக்கும்… ரசிச்சு ருசிச்சு சாப்பிடுவேன்... தகவலை பகிர்ந்த பூஜா ஹெக்டே !

ஐதராபாத் : இந்தியா முழுவதும் ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவலால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

பல்ஸ் ஆக்சிமீட்டர் எப்படி பயன்படுத்துவது.. அழகாக சொல்லிக்கொடுக்கும் பூஜா ஹெக்டே - வீடியோ

இதையடுத்து, சினிமா உள்ளிட்ட அனைத்து துறைகளும் முடங்கியுள்ளன. இதனால், நடிகர், நடிகைகள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் முடங்கி உள்ளனர்.

இந்நிலையில் , வீட்டில் முடங்கி உள்ள பூஜா ஹெக்டே தனக்கு மிகவும் பிடித்த உணவான பாஸ்தா புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

முகமூடி படத்தில்

முகமூடி படத்தில்

2012ம் ஆண்டு மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அந்த திரைப்படம் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை. இதையடுத்து, இந்தி , தெலுங்கு பக்கம் சென்ற இவர் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் நடிக்க உள்ளார்.

பூஜாவுக்கு கொரோனா

பூஜாவுக்கு கொரோனா

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தில் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் ஜார்ஜியாவில் நடைபெற்ற நிலையில் அதில் பூஜா ஹெக்டே கலந்து கொள்ள வில்லை. விரைவில் தளபதி65 படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பூஜா ஹெக்டே அதில் இருந்து மீண்டு தற்போது உடல் நலம் தேறி வருகிறார்.

ருசியான பாஸ்தா

ருசியான பாஸ்தா

இந்நிலையில், ஊரடங்கில் வீட்டில் இருக்கும் பூஜா ஹெக்டே வெளிர் நிற பைஜாமா அணிந்து கொண்டு தனது உறவுக்கார பெண்ணுடன் செல்ஃபி எடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், "நாய்க்குட்டியுடன் இரட்டையர்கள், குடும்பம், பாஜாமா கேல்ஸ் என்று எழுதியுள்ளார். மேலும் தனது ஸ்டோரி பக்கத்தில் தனக்கு மிகவும் பிடித்த உணவான , ருசியான பாஸ்தாவின் படங்களை பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், சிக்குனு இருக்க இதுதான் காரணமா என்று கேட்டு வருகின்றனர்.

பல படங்கள் கைவசம்

பல படங்கள் கைவசம்

பூஜா ஹெக்டே தற்போது ரன்வீர் சிங்குடன் சிர்க்கஸ் படத்திலும், பிரபாசுடன் ராதே ஷ்யாம் படத்திலும் நடித்துள்ளார். இப்படங்கள் ரலீசுக்கு தயாராக உள்ளன. மேலும் சல்மான் கானுடன் ஒரு படத்திலும் கமிட் ஆகி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X