கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட விஜய் பட நடிகை…. வைரலாகும் புகைப்படம் !
சென்னை : பீஸ்ட் பட நடிகை பூஜா ஹெக்டே கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே, ராதே ஷ்யாம், ஆச்சார்யா படங்களைத் தொடர்ந்து விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்து வரும் பூஜா ஹெக்டே, இரண்டு இந்தி திரைப்படத்திலும், மகேஸ்பாபுவுடன், ஜூனியர் என்டிஆரின் புதிய படம் ஒன்றிலும் ஒப்பந்தமாகி உள்ளார்.

பீஸ்ட் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்ற போது பூஜா ஹெக்டே கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் ஓய்வில் இருந்தார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பிரம்மாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு படமாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று காலை பூஜா ஹெக்டே கொரோனா முதல் டோஸ் தடுப்பூசியை தனியார் மருத்துவமனையில் செலுத்திக் கொண்டார். இணையத்தில் இந்த புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











