அச்சச்சோ.. தளபதி 65 ஹீரோயின் பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா. வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை!
சென்னை: தளபதி 65 படத்தின் ஹீரோயினான பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
முகமூடி படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அதன் பிறகு தமிழில் எந்த படத்திலும் நடிக்காத பூஜா ஹெக்டே தெலுங்கு மற்றும் இந்தியில் பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.
அல்லு அர்ஜூனுடன் வைகுந்தபுரமுலு படத்தில் நடித்தப் பிறகு அவருக்கு தமிழ் சினிமாவிலும் வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியுள்ளது. இந்தப் படத்தில் இடம் பெற்ற புட்ட பொம்மா பாடல் பெரும் வரவேற்பை பெற்றது.

2 ஹீரோயின்கள்
இந்நிலையில் விஜய்யின் தளபதி 65 படத்தில் பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜார்ஜியாவில் தொடங்கியது.

ஜார்ஜியாவில் படப்பிடிப்பு
படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விஜய் தேர்தல் முடிந்ததும் ஜார்ஜியா புறப்பட்டு சென்றார். விஜய் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. விஜய்யை தொடர்ந்து நடிகை பூஜா ஹெக்டேவும் ஜார்ஜியா சென்று இருந்தார்.

சென்னை திரும்பிய படக்குழு
விஜய், பூஜா ஹெக்டேவின் காதல் காட்சிகள் மற்றும் டூயட் பாடல்கள் அங்கு படமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்போது ஜார்ஜியாவில் படப்பிடிப்பை முடித்து விட்டு படக்குழுவினர் சென்னை திரும்பி உள்ளனர்.

பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா
விஜய் விமான நிலையத்தில் இருந்து திரும்பிய வீடியோக்கள் நேற்று இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டேவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
Recommended Video

வீட்டிலேயே தனிமை
இதனை தனது டிவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ள பூஜா ஹெக்டே, அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடன் சமீபத்தில் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என்றும் கூறியுள்ளார்.

படக்குழு அதிர்ச்சி
உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி, நான் தற்போது நன்றாக மீண்டு வருகிறேன். தயவு செய்து வீட்டிலேயே இருங்கள் பாதுகாப்பாய் இருங்கள்.. டேக் கேர் என பதிவிட்டுள்ளார். பூஜா ஹெக்டேவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications











