பீஸ்ட் படத்தின் ஷூட்டிங்கை நிறைவுசெய்த பூஜா ஹெக்டே... மகிழ்ச்சி வீடியோ வெளியீடு!
சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் வரும் படம் பீஸ்ட்.
இந்தப்படத்தின் ஷூட்டிங் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.
இந்நிலையில் படத்தில் தனது போர்ஷன் நிறைவடைந்துள்ளதாக நாயகி பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.

பீஸ்ட் படம்
நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கிவரும் படம் பீஸ்ட். நெல்சனின் முந்தைய படங்கள் கொடுத்துள்ள வெற்றியை அடுத்து விஜய்யின் இந்த படத்திற்கும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. தற்போது இந்த படத்தின் சூட்டிங் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது.

விறுவிறு ஷூட்டிங்
இந்த மாதத்திற்குள் படத்தின் சூட்டிங்கை முழுவதுமாக நிறைவு செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இதையடுத்து சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் ஜார்ஜியாவில் இன்னும் சில காட்சிகளை எடுக்க படக்குழு அங்கு செல்ல உள்ளது.

கோடை கொண்டாட்டம்
படம் கோடை கொண்டாட்டமாக அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. முன்னதாக வெளியிடப்பட்ட படத்தின் போஸ்டர்கள் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளன. சமீபத்தில் இந்த படத்தின் நூறாவது நாள் ஷூட்டிங் நிறைவை அடுத்து நெல்சன் திலீப்குமார் ஒரு போஸ்டரை வெளியிட்டிருந்தார்.

டிரம்ஸ் வாசிக்கும் விஜய்
இந்த போஸ்டரில் டிரம்ஸ் வாசிக்கும்படி விஜய் இருந்தார். மேலும் அவரை சுற்றி பூஜா உள்ளிட்டவர்கள் வெவ்வேறு இசைகருவிகளை வாசித்த வண்ணம் இருந்தனர். மிகவும் உற்சாகமான நிலையில் இந்த போஸ்டர் வெளியிடப்பட்டது.

பூஜா ஹெக்டே வீடியோ வெளியீடு
இந்நிலையில் தற்போது படத்தின் நாயகி பூஜா ஹெக்டே மகிழ்ச்சியான ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் படத்தின் ஷூட்டிங்கை தான் நிறைவு செய்துள்ளதாக பூஜா ஹெக்டே மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

படம் குறித்து அப்டேட்
மேலும் இந்த படம் காமெடி கலாட்டாவாக உருவாகியுள்ளதாகவும் நெல்சன் திலீப்குமார் மற்றும் விஜயின் பிரத்தியேகமான படமாக இது அமைந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். படத்தில் தான் பணிபுரிந்தது சுற்றுலாவிற்கு சென்று வந்தது போல இருந்ததாகவும் அவர் கூறினார்.

பூஜா போர்ஷன் நிறைவு.
இந்நிலையில் படத்தில் தன்னுடைய போர்ஷன் நிறைவடைந்தது தனக்கு வருத்தத்தை அளிப்பதாகவும் விரைவில் திரையரங்குகளில் சந்திக்கலாம் என்றும் அவர் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ பூஜா ஹெக்டே மட்டுமின்றி விஜயின் ரசிகர்களுக்கும் உற்சாகத்தை அளித்துள்ளது.


Click it and Unblock the Notifications











