பல ஆண்டுகளாக பழக்கம்.. கமல் குடும்ப விழாவில் பங்கேற்க காரணம் அதுதான்.. நடிகை பூஜா குமார் பளீச்!

சென்னை: கமலின் குடும்ப விழாக்களில் பங்கேற்றது ஏன் என்பது குறித்து நடிகை பூஜா குமார் விளக்கம் அளித்துள்ளார்.

Recommended Video

Vanitha Vijaykumar கணவருடன் Currency மாலையில் Treading

பிரபல நடிகையான பூஜா குமார், தமிழ் சினிமாவில் காதல் ரோஜாவே படத்தின் மூலம் அறிமுகமானார்.

தொடர்ந்து ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் பூஜா குமார், கமலுடன் விஸ்வரூபம் படத்தில் நடித்தார்.

கமலுடன் படங்கள்

கமலுடன் படங்கள்

அதனை தொடர்ந்து உத்தம வில்லன், விஸ்வரூபம் 2 என கமலின் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் பூஜா குமார். மேலும் மீன் குழம்பும் மான் பண்ணையும், சிவரஞ்சனியும் என்னும் சில பெண்களும் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

படுக்கையறை காட்சிகள்

படுக்கையறை காட்சிகள்

தற்போது ஃபோர்பிடன் லவ் என்ற வெப் சீரிஸில நடித்து வரும் பூஜா குமார் இளைஞர் ஒருவருடன் திருமணத்திற்கு மீறிய உறவு வைத்திருப்பது போன்று நடித்துள்ளார். இந்த வெப் சீரிஸின் சில படுக்கையறை காட்சிகள் அண்மையில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கவுதமி பிரிய காரணம்

கவுதமி பிரிய காரணம்

நடிகை பூஜா குமார், நடிகர் கமல்ஹாசனுடனும் நெருக்கமாக உள்ளார். அவரது குடும்ப விழாக்களிலும் பங்கேற்று வருகிறார் இதனால் கவுதமிக்கு பிறகு கமலுடன் நெருக்கமாக இருக்கும் நடிகை பூஜா குமார்தான் என்றும் தகவல்கள் பரவின. மேலும் கவுதமியின் கமலும் பிரிய காரணமும் பூஜா குமார் என்று தகவல்கள் பரவின.

பல ஆண்டு பழக்கம்

பல ஆண்டு பழக்கம்

இந்நிலையில் நடிகை பூஜா குமார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அதில் நடிகர் கமலுக்கும் தனக்குமான உறவு குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவர் கூறிருப்பதாவது, கமல் சாரை எனக்கு பல ஆண்டுகளாக தெரியும். அவருக்கும் எனக்கும் பல ஆண்டுகளாக பழக்கம் உள்ளது.

அதுதான் காரணம்

அதுதான் காரணம்

அவரது குடும்பத்தினரும் என நெருக்கம்தான், கமல் சாரின் அண்ணன், அவரது மகள்கள் ஸ்ருதி அக்ஷரா ஆகியோரும் எனக்கு ரொம்பவே க்ளோஸ். கமல் சாரின் குடும்பத்தினருடன் நல்ல பழக்கம் உள்ளதால்தான் அவரது குடும்ப விழாக்களில் பங்கேற்றேன்.

யாருக்கு தெரியும்

யாருக்கு தெரியும்

ஆனால் யாருடைய வாழ்க்கையிலும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. யாருக்கு தெரியும்.. இவ்வாறு தனக்கும் கமல் மற்றும் அவரது குடும்பத்தினருடன் உள்ள தொடர்பை கூறியிருக்கிறார் நடிகை பூஜா குமார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X