Just In
- 1 hr ago
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்… ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- 2 hrs ago
விமல் நடிக்கும் படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது !
- 4 hrs ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 4 hrs ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
Don't Miss!
- News
இந்தியா- சீனா இடையேயான 9-வது சுற்றுப் பேச்சு- எல்லைகளில் படைகளை விரைவாக விலக்க இருதரப்பும் ஒப்புதல்!
- Automobiles
சுஸுகி மோட்டார்சைக்கிள்களின் விலைகள் அதிகரித்தன!! ஆனா பெரிய அளவில் இல்லைங்க...
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இவருக்கு எப்ப கல்யாணம் நடந்தது? சொல்லவே இல்லை.. பெண் குழந்தைக்கு அம்மா ஆன நடிகை பூஜா குமார்!
சென்னை: பிரபல நடிகை பூஜா குமார், பெண் குழந்தைக்கு அம்மாவாகி இருப்பதாக அவர் கணவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர் நடிகை பூஜா குமார். இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.
இவர் தமிழில், காதல் ரோஜாவே என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

ஆங்கிலம், இந்தி
கேயார் இயக்கிய இந்தப் படத்தில் ஜார்ஜ் விஷ்ணு என்ற புதுமுகம் ஹீரோவாக நடித்திருந்தார். அந்தக் காலகட்டத்தில் இந்தப் படம் அதிகம் கவனிக்கப்படவில்லை. இதையடுத்து ஆங்கிலம் மற்றும் இந்தி படங்களில் கவனம் செலுத்தி வந்தார், நடிகை பூஜா.

உத்தம வில்லன்
பிறகு கடந்த 2013 ஆம் ஆண்டு விஸ்வரூபம் படம் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்தார். இதில் கமல்ஹாசன் ஜோடியாக அவர் நடித்தார். இந்தப் படம் கவனிக்கப்பட்டதை அடுத்து, கமல்ஹாசனின், உத்தம வில்லன், பிரபு நடித்த மீன் குழம்பும் மண் பானையும், விஸ்வரூபம் 2 உட்பட சில படங்களில் நடித்தார்.

ரகசியமாக திருமணம்
இவருக்கும் விஷால் ஜோஷி என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இதை அவர்கள் வெளியில் சொல்லவில்லை. திருமணத்தை ரகசியமாக வைத்திருந்தனர். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்தும் இருவரும் இதுபற்றி வெளியே சொல்லவில்லை.

பெண் குழந்தை
இந்நிலையில், பூஜா குமாரின் கணவர் விஷால் ஜோஷி, தங்களின் பெண் குழந்தையை சமூக வலைதளத்தில் மகிழ்ச்சியுடன் அறிமுகப்படுத்தி உள்ளார். கார்ப்பரேட் நிறுவனம் தலைமைச் செயல் அதிகாரியாக இருக்கும் ஜோஷி, இதுபற்றி இன்ஸ்டாகிராமில் டச்சிங்காக கூறி இருப்பதாவது:

நாவ்யா ஜோஷி
"ஒரு காலத்தில் நாங்கள் இரண்டு பேராக இருந்தோம். இப்போது மூவராக இருக்கிறோம். நானும் பூஜா குமாரும் எங்கள் மகள் நாவ்யா ஜோஷியை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி அடைகிறோம். எனக்குச் சிறந்த வாழ்க்கைத் துணையாக இருப்பதற்கும், குட்டி நாவ்யாவை இந்த உலகத்துக்கு தந்ததற்கும் பூஜாவுக்கு நன்றி.

மாற்றி இருக்கிறீர்கள்
என்னுடைய இந்த பிறந்த நாளை மிகச் சிறந்த பிறந்த நாளாக மாற்றி இருக்கிறீர்கள். உங்கள் இருவருக்கும் நன்றி. இவ்வாறு கூறியுள்ளார். கூடவே குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இதையடுத்து நெட்டிசன்ஸ் அவர்களுக்கும் குழந்தைக்கும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.