கமல் குடும்ப போட்டோவால் வைரலான பூஜா குமார்.. அவர பத்தி என்ன சொல்லியிருக்கார் பாருங்க!
Recommended Video
சென்னை: கமலின் குடும்ப விழாவில் பங்கேற்று ரசிகர்களால் உற்று நோக்கப்பட்ட பூஜா குமார் கமல் குறித்து பேசி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நடிகை பூஜா குமார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஸ்வரூபம், உத்தம வில்லன், விஸ்வரூபம் 2 ஆகிய படங்களில் கமலுடன் ஜோடியாக நடித்தார். இதன் மூலம் காதல் ரோஜாவே படத்திற்கு பிறகு தமிழக மக்களிடம் அதிகம் பேசப்பட்டார்.
அடிக்கடி கமலுடன் தென்பட்டார் பூஜாகுமார். இருவரும் வெளிநாடு சென்ற போட்டோக்கள் வெளியானது. கடாரம் கொண்டான் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியிலும் கமலுடன் ஒன்றாக கலந்துகொண்டார். இதேபோல் கிரேஸி மோகனின் இறுதிச்சடங்கிலும் கமலுடன் பூஜா குமாரும் பங்கேற்றார்.

எப்போதிலிருந்து?
இந்த விஷயங்கள் பெரிதாக பார்க்கப்படாத நிலையில், அண்மையில் கமலின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற குடும்ப விழாவிலும் கலந்துகொண்டார் பூஜா குமார். இதனால் புருவங்களை உயர்த்திய ரசிகர்கள், பூஜா குமார் எப்போது கமலின் குடும்ப உறுப்பினர் ஆனார் என கேள்வி எழுப்பினர்.

சிலை திறப்பு விழா
அந்த கேள்விக்கே விடை கிடைக்காத நிலையில் அடுத்த நாளே சென்னையில் புதிதாக திறக்கப்பட்ட ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் பாலச்சந்தர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றார். அப்போது கமல் மற்றும் ரஜினியுடன் அவர் எடுத்துக்கொண்ட போட்டோக்கள் வைரலானது.

5 வருஷமா இருக்கேன்
இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில் கமலை பாராட்டி தள்ளியிருக்கிறார் பூஜா குமார். கமல் சாருடன் 5 ஆண்டுகளாக நடித்து வருகிறேன். கமல் மிகச் சிறந்த நடிகர் மட்டுமல்ல. எல்லாவற்றிலும் மற்றவர்களுக்கு ஒரு உதாரணமான மனிதர்.

தாய் வீடு போல
ராஜ் கமல் நிறுவனம் எனக்கு சென்னையில் இன்னொரு தாய் வீடு போல. கமலைப் போல ஒரு கடுமையான உழைப்பாளியை பார்ப்பது கஷ்டம். ஒரே சமயத்துல பல வேலைகளை செய்வது பெரிது அல்ல. ஆனால் எடுக்கும் எல்லா வேலையையும் சிறப்பாக செய்யக்கூடியவர்.

ஆச்சரியமாக உள்ளது
அரசியல், சினிமா, டிவி ஷோ இப்படி ஒரே சமயத்துல பெரிய விஷயங்களில் இறங்கி எல்லாத்துலயும் திறமையுடன் கையாள்வது சாதாரண விஷயம் அல்ல. எனக்கு கமல் சாரை பார்க்கும் போது ஆச்சரியமாக உள்ளது.

ரிஸ்க் எடுப்பார்
எனக்கு பொறுமையை கற்றுக் கொடுத்தது கமல் சார்தான். எந்தத் தடை வந்தாலும் அதை எதிர்த்து போராடுவார். சினிமா மேல கமல் சாருக்கு மிகப் பெரிய காதல். எதைப் பத்தியும் பயப்படாம ரிஸ்க் எடுப்பார் என கமல்ஹாசனை புகழ்ந்து தள்ளியிருக்கிறார் பூஜா குமார்.


Click it and Unblock the Notifications











