கமலுடன் நெருக்கமாக இருக்கும் போட்டோ.. நான் அதிர்ஷ்டசாலி என கேப்ஷன்.. பூஜா குமார் வேற லெவல்!
Recommended Video
சென்னை: நடிகை பூஜா குமார் தனது சமூக வலைதளத்தில் ஷேர் செய்திருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.
நடிகை பூஜா குமார், காதல் ரோஜாவே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் பூஜா குமார், கமலுடன் விஸ்வரூபம் படத்தில் நடித்தார்.
அதனை தொடர்ந்து உத்தம வில்லன், விஸ்வரூபம் 2 ஆகிய படங்களிலும் நடித்தார். தொடர்ந்து கமலுடன் பணியாற்றி வருகிறார் பூஜா குமார்.

அப்பாவுக்கு சிலை
இந்நிலையில் கடந்த 7 ஆம் தேதி நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு சொந்த ஊரில் தனது தந்தைக்கு சிலை திறந்த கமல் குடும்பத்தினருடன் இதனை சிறப்பாக செய்து முடித்தார்.

கமலின் குடும்ப உறுப்பினர்
இந்த நிகழ்ச்சியில் அவருடன் சினிமாவில் சேர்ந்து நடித்த பூஜா குமாரும் கலந்துகொண்டார். இதுதொடர்பான போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பின. பூஜா குமார் எப்போது கமலின் குடும்ப உறுப்பினரானார் என டிவீட்டுகள் பறந்தன.

பிரபலங்கள் பங்கேற்பு
இதனை தொடர்ந்து கடந்த 8ஆம் தேதி காலை சென்னையில் புதிதாக திறக்கப்பட்ட கமலின் ராஜ்கமல் அலுவலகத்தில் இயக்குநர் பாலச்சந்தருக்கு சிலை திறக்கப்பட்டது. இதில் நடிகர் ரஜினிகாந்த், கேஎஸ் ரவிகுமார், வைரமுத்து உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

கமல் ரஜினியுடன்
அந்த நிகழ்ச்சியிலும் பூஜாகுமார் பங்கேற்றார். இந்நிலையில் கமல் மற்றும் ரஜினியுடன் சேர்ந்து பூஜாகுமார் போட்டோ ஒன்றை எடுத்துள்ளார்.
நான் அதிர்ஷ்டசாலி
அந்த போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் பூஜா குமார், நான் அதிர்ஷ்டசாலி.. இந்திய சினிமா இரண்டு லெஜன்டுகளிடம் இருந்து கற்றுகொள்ள வேண்டும்

விடாமுயற்சி
இவ்வளவு காலமாக உழைத்து இன்னும் வலுவாக இருப்பது உண்மையிலேயே ஒரு குறிப்பிடத்தக்க சாதனை! விடாமுயற்சி என்பது விளையாட்டின் பெயர்! என குறிப்பிட்டுள்ளார்.
ட்ரெடிஷ்னல்
இதேபோல் கமல் பிறந்தநாளை முன்னிட்டு சத்தியம் சினிமாவில் வெளியிடப்பட்ட ஹேராம் படத்தின் சிறப்பு காட்சி தொடர்பான நிகழ்ச்சியிலும் கமலுடன் ஜோடியாக பங்கேற்றார் பூஜாகுமார். இதில் கோல்டன் நிற சேலையில் தகதகவென ட்ரெடிஷ்னலாக ஜொலித்தார் பூஜா குமார். பூஜாகுமாரும் கமலும் இணைந்திருக்கும் போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











