'அதை' எப்படி செய்யனும் தெரியுமா.. டெமோ காட்டிய பூஜாகுமார்.. கேமராமேன் மீது காண்டான நெட்டிசன்ஸ்!
சென்னை: நடிகை பூஜா குமார் செய்முறை விளக்கம் அளித்திருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
நடிகை பூஜா குமார், காதல் ரோஜாவே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து ஹாலிவுட் படங்களில் நடித்து வரும் பூஜா குமார், கமலுடன் விஸ்வரூபம் படத்தில் நடித்தார்.
அதனை தொடர்ந்து உத்தம வில்லன், விஸ்வரூபம் 2 ஆகிய படங்களிலும் நடித்தார். தொடர்ந்து கமலுடன் பணியாற்றி வருகிறார் பூஜா குமார்.

போட்டோ ஷுட்
சமீபத்தில் நடிகர் கமல்ஹாசனின் குடும்ப விழாக்களில் பங்கேற்றார். இதனால் கவுதமிக்கு பிறகு கமலுடன் நெருக்கமாக இருக்கும் நடிகை என்று கிசுகிசுக்கப்பட்டார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள பூஜா குமார், அடிக்கடி அசத்தல் போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகிறார்.

நீல நிற டீப்நெக்
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் பூஜா குமார். அதில் கர்ச்சீப்பை வைத்து எப்படி மாஸ்க் செய்வது என்பது குறித்து செய்து காட்டியிருக்கிறார். தொடை வரை மட்டுமே உள்ள நீல நிற டீப் நெக் டாப்ஸில் அட்டகாசமாக அமர்ந்து கொண்டு செய்து காட்டியிருக்கிறார்.

எப்படி செய்வது?
ரப்பர் பேன்ட்களை வைத்துக் கொண்டு எளிமையாக எப்படி மாஸ்க் செய்வது என காட்டியிருக்கிறார். தற்போது கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் மக்கள் வீடுகளில் முடங்கிக் கிடக்கின்றனர். வீடுகளை விட்டு வெளியே வரும் மக்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

லைக்ஸ்
இதனால் பல இடங்களில் மாஸ்க் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் பலரும் டவல் கர்ச்சீப் ஆகியவற்றை கட்டிக்கொண்டு நடமாடுகின்றனர். இந்நிலையில் கர்ச்சீப்பை வைத்து மாஸ்க் செய்ய கற்று கொடுத்திருக்கிறார் பூஜா குமார். அவரது இந்த வீடியோவை பலரும் லைக் செய்துள்ளனர்.

யார் கேமரா மேன்?
அதேநேரத்தில் அவருக்கு சரியாக ஃபிரேம் வைக்கப்படவில்லை. இதனால் அவரது முகம் பாதி மட்டுமே வந்து வந்து போகிறது. இதனால் கடுப்பான நெட்டிசன்கள். யார் அந்த கேமரா மேன், அழகை முழுசாக காட்டவில்லையே என ஆதங்கப்பட்டுள்ளனர்.

அவர் நலமா?
இன்னும் சில நெட்டிசன்கள் கமல்ஹாசன் சார் எப்படி இருக்கிறார்? அவர் நலமாக இருக்கிறாரா என்றும் நலம் விசாரித்துள்ளனர். மேலும் சிலர் எங்கு இருக்கிறீர்கள்? கமல் சாருடனா அல்லது தனியாகவா என்றும் கேட்ட வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











