»   »  டெல்லியில் பிரபல கடை ஊழியரை தாக்கி துப்பாக்கியை காட்டி மிரட்டிய நடிகை பூஜா

டெல்லியில் பிரபல கடை ஊழியரை தாக்கி துப்பாக்கியை காட்டி மிரட்டிய நடிகை பூஜா

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: நடிகையும், மாடலுமான பூஜா மிஸ்ரா டெல்லியில் உள்ள பிரபல கடை ஒன்றின் ஊழியரை தாக்கியுள்ளார்.

நானும் பாலிவுட் நடிகையாக்கும் என்று கூறிக் கொள்பவர் பூஜா மிஸ்ரா. பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலம் ஆனவர். நடிகை சோனாக்ஷி சின்ஹா தன் மீது கொண்ட பொறாமையால் தனக்கு சூனியம் வைத்து விட்டதாக தொடர்ந்து கூறி வருகிறார். சோனாக்ஷியோ நீ பாட்டுக்கு கத்து நான் பாட்டுக்கு என் வேலையை பார்க்கிறேன் என்று உள்ளார். மேலும் பாலிவுட்காரர்களும் பூஜாவின் குற்றச்சாட்டுகளை கண்டுகொள்வது இல்லை.

Actress Pooja Missra assaults shopping store staff in Delhi

சர்ச்சையின் செல்லக் குழந்தையான பூஜா தற்போது மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். மேற்கு டெல்லியில் உள்ள கரோல் பாகில் இருக்கும் பிரபலமான கடை ஒன்றுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு சென்றுள்ளார் பூஜா.

அந்த கடையின் ஊழியர் ஒருவரை தாக்கியதோடு மட்டும் அல்லாமல் துப்பாக்கியை காட்டி உன்னை சுட்டுவிடுவேன் என மிரட்டியுள்ளார். பூஜாவின் இந்த சேட்டைகள் அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. கடைக்கு வந்த வாடிக்கையாளர் ஒருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பூஜா ஆத்திரம் அடைந்து கடை ஊழியரை மிரட்டியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். முன்னதாக கடந்த மாதம் டெல்லியில் உள்ள தாஜ் த்வாரகா ஹோட்டலில் ஊழியரை பூஜா தாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Police said that Pooja Missra was caught on camera roughing up the staff in Karol Bagh in west Delhi on Sunday
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil