பச்ச குழந்தையை வச்சிக்கிட்டு இப்படியா? பூஜா- ஜான் கொக்கேன் ஜோடி செய்யும் அட்டகாசம்!
சென்னை: நடிகை பூஜா ராமசந்திரன் தனது குழந்தையை வைத்துக் கொண்டு பதிவிடும் கவர்ச்சி புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கண்டபடி திட்டி வருகின்றனர்.
எஸ்.எஸ் மியூசிக்கில் தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கி பூஜா ராமச்சந்திரன், எஸ்.எஸ் மியூசிக்கில் குட்டி கவுனைப்போட்டுக்கொண்டு அழகாக வலம் வருவார்.
இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியைக் காணவே ஏராளமான ரசிகர்கள் டிவியின் முன் அமர்ந்து கொண்டு இருப்பார்கள்.

நடிகை பூஜை ராமச்சந்திரன்: தொகுப்பாளினியாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த பூஜா ராமச்சந்திரன், காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, காஞ்சனா 2, நண்பேன்டா, அந்தகாரம் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். தமிழ் படங்கள் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளப்படங்களிலும் நடித்து அனைத்து ஆடியன்சுக்கும் தெரிந்த முகமாக மாறினார் பூஜா.
காதல் திருமணம்: முதல் கணவரை பிரிந்த இவர், சார்பட்டா படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் மிரட்டிய மலையாள நடிகர் ஜான் கொக்கைனை இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு மே மாதம் ஆண் குழந்தை பிறந்த நிலையில், கியான் கோக்கேன் என அழகான பெயர் வைத்துள்ளனர்.

இப்படியா பண்ணுவீங்க: இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இந்த காதல் தம்பதியினர் வாரயிறுதி நாட்கள் வந்துவிட்டால் போதும் சும்மா ஜாலியாக ஊர் சுற்ற கிளம்பிவிடுவார்கள். அந்த வகையில், தற்போது தனது செல்ல மகனுடன் கடற்கரையில் அலைகளுக்கு நடுவே குழந்தையை கொஞ்சும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளனர். அந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்தாலும், பச்ச குழந்தையை வச்சிக்கிட்டு இப்படியா? பண்ணுவீங்க என்று இணையத்தில் கருத்துக்களை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











