வயிற்றில் குழந்தையுடன் லூட்டி அடிக்கும் பூஜா ராமச்சந்திரன்.. வீக் எண்ட் ஆனாலே கும்மாளம் தான்!

சென்னை : கர்ப்பமாக இருக்கும் பூஜா ராமச்சந்திரன் கணவனோடு வீக் எண்டை சூப்பராக கழித்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

எஸ்.எஸ் மியூசிக்கில் தொகுப்பாளினியாக இருந்த நடிகை பூஜா ராமச்சந்திரன் காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா, காஞ்சனா 2, நண்பேன்டா உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் படங்களில் மட்டுமில்லாமல், ரா, தேவி ஸ்ரீ பிரசாத், லா, தொச்சாய் உள்ளிட்ட தெலுங்கு படங்களிலும் ஒரு சில மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகை பூஜா ராமச்சந்திரன்

நடிகை பூஜா ராமச்சந்திரன்

நடிகை பூஜா ராமச்சந்திரன் தொகுப்பாளினியாக இருந்த போது, கிரெக் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின் இவர்களுக்கு இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்தனர். இதையடுத்து, சார்பட்டா படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் மிரட்டிய மலையாள நடிகர் ஜான் கொக்கைனை இரண்டாவதாக காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

இவர், பாகுபலி திரைப்படத்திலும், கேஜிஎஃப் திரைப்படத்திலும் மிரட்டலான கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் நடித்து கவனத்தை ஈர்த்தார். பின் அஜித்துடன் துணிவு படத்தில் வில்லனாக நடித்து பெயர் எடுத்த ஜான் கொக்கைன், அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் திரைப்படத்திலும் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

கர்ப்ப அறிவிப்பு

கர்ப்ப அறிவிப்பு

இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர்கள் இருவரும், ஜாலியாக சைக்கிளிங் போவது, மலையேறுவது, நீச்சல் குளத்தில் ஆட்டம்போடுவது என ஜாலியாக பொழுதை கழித்து வருவார்கள். கடந்த டிசம்பர் மாதம் பூஜா ராமச்சந்திரன் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான தகவலை இருவரும் புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்திருந்தனர்.

வீக் எண்ட் ஆனாலே கும்மாளம் தான்

வீக் எண்ட் ஆனாலே கும்மாளம் தான்

கர்ப்ப அறிவிற்கு பின் பூஜா, சுகப்பிரசவம் ஆக தலைகீழாக யோகாசனம் செய்து ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்தார். அது மட்டுமில்லாமல், பிகினியில், கணவரின் கையை பிடித்துக்கொண்டு கடற்கரையில் ஆட்டம் போட்டார். கடந்த மாதம் பூஜாவுக்கு தடபுடலாக வளைகாப்பு நடந்த நிலையில், குழந்தை பிறக்க இன்னும் சில நாட்களே இருக்கும் போது, தனது காதல் கணவருடன் வீக் எண்டை ஜாலியாக கடற்கரை ரெஸ்டாரெண்டில் பொழுதை கழித்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த பேன்ஸ், வீக் எண்ட் ஆனாலே கும்மாளம் தானா என கிண்டலடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X