Don't Miss!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- News பாஜக - விசிகவினர் இடையே அடிதடி.. 2 நிர்வாகிகளின் மண்டை உடைப்பு.. அரியலூரில் பதற்றம் - போலீஸ் குவிப்பு
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Technology ஏப்.22-24.. அடுத்த வாரம் அமோக வாரம்.. விற்பனைக்கு வரும் 3 புது 5G போன்கள்.. எல்லாமே ரூ.15,000.. எதை வாங்கலாம்?
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
இன்று பிறந்த நாள்..ரசிகர்களின் வாழ்த்து மழையில் நனைத்த பூஜா!
கொழும்பு : தமிழ், சிங்களம், மலையாளம் என பல மொழிகளில் கதாநாயகியாக வலம் வந்தவர் பூஜா உமாசங்கர். இவர் ஜேஜே, அட்டகாசம், உள்ளம் கேட்குமே போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.
இந்நிலையில் இன்று இவர் தனது பிறந்தநாளை மிகவும் மகிழ்ச்சியுடன் தனது குடும்பத்தாருடன் கொண்டாடிவருகிறார்.
ஜூன் 25 ஆம் தேதியான இன்று தனது 39வது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி இவருக்கு நண்பர்கள் ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் என பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
கஸ்தூரியா இது.. அடையாளமே தெரியல..குழம்பி போன ரசிகர்கள்.. வைரலாகும் புகைப்படம் !
ஜேஜே அறிமுகம்
தனது நண்பரின் மூலம் உள்ளம் கொள்ளை போகுதே இயக்குனருக்கு அறிமுகமான பூஜா உமாசங்கர். முதலில் உள்ளம் கேட்குமே என்ற படத்தில் தான் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். பின் அந்த படம் வெளியாக கொஞ்சம் தாமதமானதால் இவர் இரண்டாவதாக நடித்த ஜேஜே படம் இவருக்கு அறிமுகப் படமாக வெளியானது.
அஜித்துக்கு ஜோடி
அஜித்தின் ஃபேவரட் இயக்குனரான சரண் இயக்கத்தில் ஜேஜே படத்தில் இவர் மாதவனுடன் இணைந்து நடித்து நல்ல பெயரை பெற்றார். இதைத் தொடர்ந்து தல அஜித்தை வைத்து சரண் மீண்டும் இயக்கிய அட்டகாசம் என்ற அட்டகாசமான படத்தில் நடிகை பூஜா அஜித் குமாருக்கு ஜோடியாக முதல்முறை கதாநாயகி கதாபாத்திரத்தில் நடித்தார்.
நல்ல பெயர் கிடைத்தது
இவ்வாறு நடித்த முதல் இரண்டு படங்களுமே இவருக்கு நல்ல பெயரைப் பெற்று தந்த நிலையில், இவர் நடித்து நெடுங்காலமாக வெளியாகாமல் இருந்த உள்ளம் கேட்குமே படம் 2005ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ஷாம், ஆர்யா, அசின், லைலா, பூஜா போன்ற அனைவரும் இளம் கதாநாயகர்களாக இளமை துள்ள நடித்திருந்த இந்தப் படம் காதல், நட்பு என அனைத்து அம்சமும் கொண்டு வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைபெற்று வெற்றி பெற்றது.
ஆர்யாவுக்கு ஜோடி
பூஜா உள்ளம் கேட்குமே படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக ஆங்லோ இந்தியன் பெண் கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது பாராட்டையும் வெகுவாக பெற்றார். இவ்வாறு தனது ஆரம்ப காலங்களில் நடித்த அனைத்து படங்களிலுமே தனது நடிப்பு முத்திரையை அனைவரிடமும் பதித்து வந்தார் பூஜா.
திறமையான நடிகை
இவர் சிங்களத்தில் நடித்த அஞ்சலிகா என்ற படம் மாபெரும் வெற்றி பெற்று அதற்காக இவர் பல விருதுகளையும் தட்டிச் சென்றார். இவ்வாறு கிடைக்கின்ற ஒவ்வொரு படங்களிலும் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டு வந்த பூஜா உமாசங்கர் பல இளம் இயக்குனர்களுடனும் பல இளம் நடிகர்களுடனும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.
பார்க்கவே பரிதாபமாக
காதல் படங்களில் தொடர்ந்து நடித்து நம் அனைவரையும் ரசிக்க வைத்து வந்த இவருக்கு இயக்குனர் பாலா இயக்கத்தில் நான் கடவுள் படத்தில் ஆர்யாவுடன் மீண்டும் இணைய வாய்ப்பு கிடைத்தது. இதுவரை பூஜாவை அழகான ரோஜாவைப் போலவே பார்த்து வந்த நமக்கு இந்தப்படத்தில் பூஜாவை பார்க்கவே பரிதாபமாக இருந்தது.
பல பாட்டுகளை
எனினும் அதைப்பற்றியெல்லாம் பூஜா கவலைப்படாமல் அம்சவல்லி என்ற சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து பல பாட்டுகளை பெற்றது மட்டுமல்லமல் இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான பல விருதுகளையும் அள்ளி வந்தார்.
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
இவ்வாறு தனது படங்களின் மூலம் அனைவரது மனங்களையும் விருதுகளையும் கொள்ளை கொண்ட பூஜா உமாசங்கர் இன்று தனது பிறந்தநாளை குடும்பத்தாருடன் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார். ஜூன் 25ஆம் தேதியான இன்று இவர் தனது 39வது பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருவதையொட்டி நண்பர்கள் ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் என அனைவரும் தங்களது வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.