poonam bajwa: படமும் இல்ல.. வருமானமும் இல்ல.. ரூட்டை மாற்றிய பூனம் பஜ்வா!
சென்னை: நடிகைகள் எப்போதும் லைம் லைட்டில் இருக்க வேண்டும் என்பதற்காக இணையத்தில் அவ்வப்போது ஏதாவது ஒரு போட்டோக்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அந்த வகையில் நடிகை பூனம் பஜ்வா instagramல் கவர்ச்சி தூக்கலாக இருக்கும் போட்டோக்களை பதிவிட்டு ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்திருக்கிறார். அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகை பூனம் பஜ்வா, மும்பையை சேர்ந்தவர் பூனம் சிங் பஜ்வா . இவரின் பெற்றோர் அமர்ஜித் சிங் பஜ்வா, ஜெயலட்சுமி பஜ்வா ஆவார்கள். இவரின் தந்தை அமர்ஜித் சிங் கடற்படை அதிகாரி ஆவார். பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை மும்பையில் படித்த பூனம் பஜ்வா,சிம்போசிஸ் இன்டர்நேஷனல் யூனிவர்சிட்டியில் ஆங்கில இலக்கியம் படித்து பட்டம் பெற்றார். இவருக்கு சிறுவயதில் இருந்தே மாடலிங்கில் ஆர்வம் இருந்ததால், ஒரு சில விளம்பர படத்தில் மாடலாக இருந்துள்ளார்.

அடுத்தடுத்த படத்தில்: இதைத்தொடர்ந்து ஒரு சில படத்தில் பூனத்திற்கு வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்துத்தான், தமிழில்,சேவல் என்ற படத்தில் பரத்திற்கு ஜோடியாக நடித்தார். முதல் படத்திலேயே அப்பாவியான பெண்ணாக நடித்து ஸ்கோர் செய்திருந்த பூனத்திற்கு, தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, குப்பத்து ராஜா, குருமூர்த்தி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.அழகு, திறமையும் இருந்த போது, சரியான கதைகளை தேர்வு செய்யாமல், வருமானம் வந்தால் போதும் என, வந்த படத்தில் எல்லாம் நடித்தார். சுந்தர் சியின் முத்துனகத்திரிக்காய் படத்திற்கு பிறகு, அனைத்து படத்திலும் கவர்ச்சி நடிகையாகவே நடித்து வருகிறார்.
ஓவர் கவர்ச்சி: தற்போது, பூனம் பஜ்வாவிற்கு படவாய்ப்பு பெரியதாக இல்லாததால், இணையத்தில் அவ்வப்போது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர், மோட்டை மாடியில் வெறும் ஜாக்கெட் மற்றும் ஸ்கர்டுடன், இடையழகை காட்டி போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோவைப் பார்த்த ரசிகர்கள் சிலர், லைக்குகளை குவித்து வந்தாலும், படவாய்ப்பு இல்லை என்பதற்காக இப்படியா என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











