Poonam Bajwa: செருப்பை கழட்டிய பூனம் பஜ்வா.. டென்ஷனான ஃபேன்ஸ்!
சென்னை: அழகான கொழு கொழு நடிகையான பூனம் பஜ்வா, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கிறார். இணைய பக்கங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி கிளாமரான புகைப்படங்கள் மற்றும் போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் தற்போது கொடுத்து இருக்கும் போஸ், ரசிகர்களை சங்கடத்தில் ஆழ்த்தி உள்ளது.
மும்பையை பூர்வீகமாக கொண்டவர் பூனம் சிங் பஜ்வாயின் தந்தை அமர்ஜித் சிங் பஜ்வா, தாயார் ஜெயலட்சுமி பஜ்வா ஆவார். பூனமின் தந்தை அமர்ஜித் சிங் கடற்படை அதிகாரியாக பதவி வகித்தவர் ஆவார். நடிகை பூனம் பஜ்வா, பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை மும்பையில் முடித்தார். பின் தனது கல்லூரி படிப்பை சிம்போசிஸ் இன்டர்நேஷனல் யூனிவர்சிட்டியில் ஆங்கில இலக்கியம் படித்து பட்டம் பெற்றார். மாடலிங்கில் ஆர்வம் கொண்ட இவர், அதற்காக கடுமையான முயற்சிகள் எடுத்தார். அதன் பயனாக ஒரு சில விளம்பர படத்தில் மாடலாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

நடிகை பூனம் பஜ்வா: இதைத்தொடர்ந்து ஒரு சில படத்தில் பூனம் பஜ்வா நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தமிழில், சேவல் என்ற படத்தில் பரத்திற்கு ஜோடியாக நடித்தார். முதல் படத்திலேயே அப்பாவியான பெண்ணாக நடித்து ஸ்கோர் செய்திருந்த பூனம் பஜ்வா, தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, ஆம்பள, ரோமியோ ஜூலியட், அரண்மனை 2, குப்பத்து ராஜா, குருமூர்த்தி உள்ளிட்ட படங்களில் நடித்தார். அழகு, திறமையும் இருந்த போது, சரியான கதைகளை தேர்வு செய்யாமல், வருமானம் வந்தால் போதும் என, வந்த படத்தில் எல்லாம் நடித்து தனது இமேஜை குறைத்துக்கொண்டார்.

செருப்பை கழட்டிய பூனம்: இவர், சுந்தர் சியின் முத்துனகத்திரிக்காய் படத்தில் அவருக்கு ஜோடியாக சற்று கவர்ச்சியாக நடித்திருந்தார். அந்த படத்திற்கு பிறகு, பூனத்திற்கு வந்த அனைத்து ரோலும் கவர்ச்சியாகவே வந்ததால், தொடர்ந்து அதுபோன்று நடித்து கவர்ச்சி நடிகையாகவே மாறிவிட்டார். தற்போது, பூனம் பஜ்வாவிற்கு படவாய்ப்பு பெரியதாக இல்லாததால், இணையத்தில் அவ்வப்போது போட்டோக்களை வெளிட்டு வருகிறார். அந்த வகையில் காதலர் தினத்தில், காதலை பிரதிபலிக்கும் சிவப்பு உடையில் செருப்பை கழட்டுவது போன்றும், செருப்பை கையில் எடுப்பது போலவும் போஸ் கொடுத்து இருந்தார். இதைப்பார்த்த ரசிகர்கள், என்ன பூனம் இதெல்லாம் என்றும், காதலர் தினத்தில் எதற்கு இப்படி ஒரு போஸ், காதல் என்றால் அவ்வளவு வெறுப்பா என கேள்வி கேட்டு வருகின்றனர். அந்த போட்டோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











