ஆண்கள் காபி குடிக்க அழைத்தால் ஜாக்கிரதை.. சர்ச்சையை கிளப்பிய பூனம் பஜ்வா!
சென்னை: ஆண்கள் காபி குடிக்க அழைத்தால் ஜாக்கிரதையாக இருங்க என்று பூனம் பஜ்வா சர்ச்சையை கிளப்பும் பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார்.
அடக்க ஒடுக்கமாக குடும்பப்பாங்கான நடிகையாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை பூனம் பஜ்வா. ஜீவாவுடன் சில படங்களில் ஜோடிப் போட்டு நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

அதன் பின்னர், சைடு ரோல் கதாபாத்திரங்களில் நடிக்கும் அளவுக்கு அவரது மார்க்கெட் சரிந்தது.
பூனம் பஜ்வா: ஹரி இயக்கிய சேவல் படத்தில் தமிழில் தனது அறிமுகத்தை கொடுத்த பூனம் பாஜ்வாவிற்கு, முதல் திரைப்படமே கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதை அம்சம் கொண்ட படமாக இருந்தது. இந்த படத்தில் இவரின் நேர்த்தியான நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள்.
அடுத்தடுத்த படங்களில்: இதையடுத்து, தெனாவட்டு, கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை போன்ற திரைப்படங்களில் பிஸியாக நடித்தார். திடீரென இவருக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் போகவே கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ரோமியோ ஜூலியட், முத்துனக்கத்திரிக்காய் திரைப்படத்திலும் கவர்ச்சியை தூக்கலாக காட்டி, கை நழுவிய வாய்ப்பை மீண்டும் பெற்றுவிட முயற்சி செய்தார்.

இணையத்தில் ஆக்டிவ்: இன்ஸ்டாகிராமில் ஏராளமான பாலோவர்களை வைத்துக்கொண்டு இளமையுடன் வலம் வந்து கொண்டிருக்கும் பூனம் பஜ்வா, கிளுகிளுப்பான கவர்ச்சி உடையில் புகைப்படங்களை எடுத்து வெளியிடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். இவருக்கு சேலை மாடர்ன் டிரஸ் என எந்த உடை அணிந்தாலும் அதில் கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாகவே இருக்கும் என்பதால், பேன்ஸ் ஜொள்ளு விட்டு பார்த்து வருவார்கள்.
சர்ச்சைப்பதிவு: இந்நிலையில் பூனம் பஜ்வா தனது, சமூக வலைத்தளப்பக்கத்தில், ஆண்கள் பொதுவாக பெண்களிடம் காபி குடிக்க போலாமா என்று கேட்பார்கள். அவர்கள் அப்படி அழைப்பதில் பல விஷயம் இருக்கு, அது எனக்கு நன்றாகவே தெரியும், அப்படி அவர்கள் அழைத்தால், ஜாக்கிரதையாக இருங்கள் என்று பூனம் பஜ்வா கூறியுள்ளார். இவர் இவ்வாறு கூறியுள்ளது தற்போது சர்ச்சையாகி, காபி குடிக்க அழைப்பது ஒரு குத்தமா என ஆண் ரசிகர்கள் முந்திக்கொண்டு இவரை வசைபாடி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











