சோஃபாவில் ஃபிரியாய் படுத்திருக்கும் பூனம் பஜ்வா.. யாருக்கான கேப்ஷன்? திணறடிக்கும் போட்டோ!
சென்னை: நடிகை பூனம் பஜ்வா ஷேர் செய்திருக்கும் போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாயை பிளந்துள்ளனர்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பிஸியாக உள்ள நடிகைகளில் ஒருவர் பூனம் பஜ்வா.
பஞ்சாப்பியான இவர், பிறந்து வளர்ந்ததெல்லாம் மும்பையில்தான். தெலுங்கு சினிமாவின் மூலம் திரைத்துறைக்கு என்ட்ரி கொடுத்தார் பூனம் பஜ்வா.

பிஸியான பூனம் பஜ்வா
அடுத்தடுத்து மூன்று படங்களில் நடித்தார் பூனம் பஜ்வா. தொடர்ந்து கன்னட சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்க பிஸியானார். அதன் தொடர்ச்சியாக தமிழில் அடுத்தடுத்து 6 படங்களில் கமிட்டானார்.

போட்டோக்கள் வீடியோக்கள்
பின்னர் மலையாளத்திலும் தடம் பதித்த பூனம் பஜ்வா, தற்போது பதோம்பதம் நூட்டன்டு என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார். சமுக வலைதளங்களில் ஆக்ட்டிவாக உள்ள பூனம் பஜ்வா, அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்து வருகிறார்.

கவர்ச்சியில் தாராளம்
தற்போது கைவசம் பெரிதாக படங்கள் எதுவும் இல்லாததால் கவர்ச்சியில் தாராளம் காட்டி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார் பூனம் பஜ்வா. அந்த வகையில் மாடர்ன் டிரெஸில் போதும் போதும் எனும் அளவுக்கு கிளாமர் காட்டி வருகிறார்.

ரொம்ப ஃபிரியா இருக்கீங்களே
இந்நிலையில் படுக்கையில் ஸ்லீவ்லெஸ் நைட் டிரெஸில் ஹாயாக படுத்துள்ளார் பூனம். பூனம் பஜ்வாவின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் ரொம்ப ஃபிரியா இருக்கீங்களே என்று டபுள் மீனிங்கில் கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.

என்னுடையது என்று அழைக்கவா?
மேலும் அந்த போட்டோவுக்கு உங்களுக்கு பெயர் இருக்கிறதா அல்லது நான் என்னுடையது என்று அழைக்கலாமா என்றும் கேட்டு கேப்ஷன் கொடுத்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் யாருக்கான கேப்ஷன் இது என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











