மேக்கப் வேண்டாம்.. சோகமாவே இருக்கீங்களே ஏன்? நடிகை பூனம் பஜ்வாவிடம் கேட்கும் ரசிகர்கள்!
சென்னை: நடிகை பூனம் பஜ்வா வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் சமீபகாலமாக அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை பூனம் பஜ்வா.
இதற்கு ரசிகர்கள் கன்னாபின்னாவென்று லைக்ஸ்களையும் கமென்ட்களையும் குவித்து வருகின்றனர்.

ஸ்பெஷல் போட்டோ
இதை எதிர்பார்த்தோ என்னவோ, அவரும் அடிக்கடி புதிய புதிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதற்காகவே ஸ்பெஷல் போட்டோஷூட்டையும் நடத்தி வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என நடித்து வந்த பூனம் பஜ்வாவுக்கு இப்போது அதிக வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

விவரிக்க முடியாத
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன் தனது காதலர், சுனில் ரெட்டியை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு, வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவு உன்னைக் காதலிக்கிறேன் என்றும் கூறியிருந்தார். அந்தப் புகைப்படங்கள் வைரலாயின.

இப்படி கிளாமர்ல
வழக்கமாக கிளாமர் புகைப்படங்களை வெளியிடாத பூனம் பஜ்வா, இப்போது கிளாமருக்கு மாறியிருக்கிறார். கடந்த முறை அவர் வெளியிட்ட கிளாமர் ஸ்டில் கண்டு, சில நெட்டிசன்ஸ் 'நீங்களும் இப்படி கிளாமர்ல இறங்கிட்டீங்களே? என்று வருத்தமாகக் கேட்டிருந்தார்.

வெட்கப்படும் படி
இந்நிலையில், இப்போது சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதற்கு வழக்கம் போல, நெட்டிசன்ஸ், அவர் அழகை புகழ்ந்து தள்ளியுள்ளனர். இதில் பல நெட்டிசன்களின் கமென்ட்களுக்கு பதில் அளித்திருக்கிறார் பூனம் பஜ்வா. சிலர் கொஞ்சம் ஓவராக, அவரே வெட்கப்படும் படி புகழ்ந்துள்ளனர்.

மேக்கப் போடாதீங்க
சிலர், வயசு குறைஞ்சுட்டே போற மாதிரி இருக்கே, எப்படி என்று கேட்டுள்ளனர். அதற்கு நன்றி தெரிவித்துள்ளார் பூனம். நீங்க இயற்கையிலேயே அழகா இருக்கீங்க.. மேக்கப் போடாதீங்க என்று சிலர் அட்வைஸ் செய்துள்ளனர். சில நேரம் சோகமாவே இருக்கீங்களே ஏன்? என்றும் கேட்டுள்ளனர்.

முத்தின கத்திரிக்காய்
ஹரி இயக்கிய சேவல் மூலம் தமிழில் அறிமுகமானவர், பூனம் பஜ்வா. அடுத்துஜீவாவுடன் தெனாவட்டு மற்றும் கச்சேரி ஆரம்பம் படங்களில் நடித்தார். இந்தப் படங்கள் கவனிக்கப்பட்டன. சுதா கொங்கராவின் முதல் படமான துரோகி, தம்பிக்கோட்டை சுந்தர். சி. இயக்கத்தில் உருவான அரண்மனை 2, முத்தின கத்திரிக்காய் படங்களில் இவர் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











