சமந்தா திருமணம்.. பணத்தால் பலவீனமான ஆண்களை ஈஸியாக வாங்கலாம்.. மறைமுகமாக தாக்கிய நடிகை!
சென்னை: நடிகை சமந்தா ரூத் பிரபுவும், ராஜ் நிடிமோருவும் நேற்று எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் கோயம்புத்தூரில் உள்ள ஈஷா மையத்தில் லிங்க பைரவி ஆலயத்தில் நடைபெற்றது. சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமணப் புகைப்படங்களைப் பகிர்ந்து திருமணத்தை உறுதிப்படுத்திய நிலையில், நடிகை பூனம் கவுர் தனது எக்ஸ் தளபக்கத்தில், போட்டுள்ள பதிவு பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
நடிகை சமந்தா, நாக சைதன்யா இருவரும் காதலித்து 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். கோவாவில் இவர்களின் திருமணம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் சமந்தா தொடர்ந்து நடித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர். இவர்கள் எந்த காரணத்திற்காக பிரிந்தார்கள் என்பது தெரியாததால், பலவிதமான விமர்சனத்தை சமந்தா சந்தித்தார். மேலும், சமந்தா 'தி பேமிலி மேன் 2' வெப் தொடரில் மிகவும் ஆபாசமாக நடித்தது தான் விவாகரத்திற்கு காரணம் என சொல்லப்பட்டது.
இயக்குநருடன் காதல்: இதையடுத்து, சமந்தா 'தி பேமிலி மேன்' வெப் தொடரின் இயக்குநர் ராஜ் நிடிமோருவைல காதலித்து வருவதாக கடந்த ஆண்டு முதல் வதந்திகள் பரவின. ஆனால், சமந்தா ஒருபோதும் உறவை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், பொதுவெளியில் ஒன்றாகக் காணப்பட்டனர். இதையடுத்து, நேற்று கோயம்புத்தூரில் ஈஷா யோக மையத்தில் மிகவும் எளிமையாக திருமணம் நடந்தது. இந்த புதுமண தம்பதிகளுக்கு ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், சிலர் சமூக வலைத்தளங்களில் சமந்தாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

அகங்காரம் கொண்ட பெண்: அந்த வகையில் நடிகை பூனம் கவுர், தனது எக்ஸ் தளத்தில், "ஒருவரின் வீட்டைக் கெடுத்து, நீ புதிய வீட்டைக் கட்டிவிட்டாய்" என்றும், "சுயசக்தி மற்றும் கல்வி அறிவு இல்லாத, அகங்காரம் கொண்ட பெண். பலவீனமான, உதவியற்ற ஆண்களைப் பணத்தால் வளைக்க முடியும்" என பதிவிட்டுள்ளார். பூனம் கவுர், சமந்தாவின் திருமணத்தை தான் மையமாக விமர்சித்துள்ளார் என பரவலாகப் பேசப்பட்டது. பூனம் கவுரின் இந்த பதிவு இணையத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், நெட்டிசன்களும் சமந்தாவை விமர்சித்தும், கிண்டல் செய்தும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











