வெறித்தனமாக காதலிக்கிறோம்.. பாலியல் புகாருக்கு பிறகு மீண்டும் கணவருடன் சேர்ந்த பூனம் பாண்டே!

மும்பை: கணவர் மீது பாலியல் புகார் அளித்த நடிகை பூனம் பாண்டே மீண்டும் கணவருடன் சேர்ந்துள்ளார்.

நடிகை பூனம் பாண்டே தனது நீண்ட நாள் காதலரான சாம் பாம்பேவை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்தார். டேட்டிங்கில் இருந்த இவர்கள் லிவிங் டூ கேதரில் வாழ்ந்து வந்தனர்.

அவ்வப்போது அவர்களின் லிப்லாக் போட்டோஸ் மற்றும் அந்தரங்க போட்டோக்களை நடிகை பூனம் பாண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செய்து இளைஞர்களை உசுப்பேற்றி வந்தார்.

10ஆம் தேதி திருமணம்

10ஆம் தேதி திருமணம்

திருமணத்திற்கு முன்பே கணவன் மனைவி போன்று வாழ்ந்து வந்த இவர்களுக்கு கடந்த ஜூலை மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து கடந்த 10 ஆம் தேதி இருவரும் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். திருமண போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார் பூனம் பாண்டே.

திருமதி பாம்பே

திருமதி பாம்பே

மேலும் ஏழேழு ஜென்மங்களும் உன்னேடு வாழ காத்திருக்கிறேன் என்றும் தங்களின் திருமண போட்டோக்களுக்கு கேப்ஷன் கொடுத்திருந்தார் பூனம் பாண்டே. அவர்களின் திருமண போட்டோக்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவியது. பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

ஹனிமூன்

ஹனிமூன்

திருமணத்திற்கு பிறகும் தனது ஆபாச வெப் சைட்டுக்காக வீடியோ ஷுட்டிங்கில் பிஸியாக இருந்த பூனம் பாண்டே. கடந்த 16 ஆம் தேதி பூனம் பாண்டே தனது கணவருடன் கோவாவுக்கு ஹனிமூன் சென்றார். ஹனிமூன் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து சூடேற்றினார் பூனம் பாண்டே.

கணவர் கைது

கணவர் கைது

ஆனால் கடந்த 21ஆம் தேதி இரவு நடிகை பூனம் பாண்டே தனது கணவர் சாம் பாம்பே தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், ஒரு மிருகத்தை அடிப்பது போல் அடித்து துன்புறுத்தியதாகவும் கோவா போலீஸில் புகார் அளித்தார். இதனை தொடர்ந்து சாம் பாம்பே கைது செய்யப்பட்டார்.

போட்டோக்கள் டெலிட்

போட்டோக்கள் டெலிட்

இதனை தொடர்ந்து பேசிய பூனம் பாண்டே, மிருகத்தை அடிப்பது போல் அடிப்பவருடன் என்னால் வாழ முடியாது என கூறினார். இதனால் இருவரும் விவாகரத்து செய்து கொள்ளப் போகிறார்கள் என்று தகவல் வெளியானது. சாம் பாம்பேவும் பூனம் பாண்டேவுடன் எடுத்த அனைத்து போட்டோக்களையும் சமூக வலைதளத்தில் இருந்து டெலிட் செய்தார்.

பிரச்சனைகள் தீர்ந்தது

பிரச்சனைகள் தீர்ந்தது

இந்நிலையில் நடிகை பூனம் பாண்டேவும் சாம் பாம்பேவும் மீண்டும் சேர்ந்துள்ளனர். இதுதொடர்பாக பூனம் பாண்டே அளித்த பேட்டியில் இருவரும் மீண்டும் இணைந்துள்ளதை உறுதிப்படுத்தியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது "நாங்கள் விஷயங்களை சரி செய்ய முயற்சிக்கிறோம், சின்னதோ பெருசோ எல்லாவற்றையும் பேசி தீர்த்திருக்கிறோம்.

வெறித்தனமாக காதலிக்கிறோம்

வெறித்தனமாக காதலிக்கிறோம்

நாங்கள் மீண்டும் ஒன்றாக இருக்கிறோம். உங்களுக்கு தெரியுமா? நாங்கள் இருவரும் ஒருவருக்கொருவர் அதிகமாக நேசிக்கிறோம். நாங்கள் வெறித்தனமாக காதலிக்கிறோம். எந்த திருமணத்தில் பிரச்சனை இல்லாமல் இருக்கிறது? இவ்வாறு கூறியுள்ளார் பூனம் பாண்டே.

முடிந்து விட்டது

முடிந்து விட்டது

இதேபோல் சாம் பாம்பேவும் தங்களின் பிரச்சனைகளை பேசித் தீர்த்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் எல்லாம் முடிந்துவிட்டது என்று நான் சொல்வேன் என்று கூறியுள்ளார். முன்னதாக ஸ்பாட்பாய் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் இந்த வழக்கை அவர் திரும்பப் பெறலாம் என்று ஹின்ட் கொடுத்திருந்தார்.

அடிக்கிறார் அழுகிறார்

அடிக்கிறார் அழுகிறார்

அதில் பேசிய அவர் "இந்த நேரத்தில் நான் மிகவும் மோசமாக தாக்கப்பட்டேன், இது ஒரு பாதி கொலை. நான் மருத்துவமனையில் எத்தனை நாட்கள் இருந்தேன் என்பது எனக்குத் தெரியாது. ஏனென்றால் அவர் என் முன்னால் அழுகிறார், எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை? ஒவ்வொரு முறையும் அவர் என்னை அடித்து, பின்னர் மன்னிக்கவும் என்று அழ ஆரம்பிக்கிறார்.

ரத்தக்கசிவு

ரத்தக்கசிவு

இந்த முறையும் அவர் அவ்வாறே செய்தார், அது மீண்டும் நடக்காது என்றும் நான் உனக்கு நல்லது செய்வேன் என்றும் உறுதியளித்தார். ஆனால் இது அவர் எப்போதும் செய்து கொண்டே இருக்கும் ஒன்று. அவர் காரணமாக எனக்கு மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டது, "என்று பூனம் பாண்டே கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X