பூனம் பாண்டேவின் தாராள மனசு.. கேரள மக்களுக்கு ஒரு பட சம்பளத்தை நிதியுதவியாக வழங்கினார்!
கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பூனம் பாண்டே, ஒரு படத்தின் முழு சம்பளத்தை நிதியுதவியாக வழங்கியுள்ளார்.
சென்னை: கேரளா வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பூனம் பாண்டே, ஒரு படத்தின் முழு சம்பளத்தை நிதியுதவியாக வழங்கியுள்ளார்.
கடந்த ஒரு மாதமாக கேரளத்தில் நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு மழை பெய்தது. மழையால் ஏற்பட்ட பாதிப்பால் இதுவரை 346 பேர் உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து பெய்து வரும் தொடர் கனமழையால் அம்மாநிலம் வெள்ளத்தாலும், நிலச்சரிவாலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.
கேரள மக்களுக்கு பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், தமிழ் திரையுலகினரும் நிதியுதவி மற்றும் பொருளுதவி அளித்து வருகின்றனர்.
தமிழ் திரையுலக நடிகர்கள் கமல், சூர்யா, கார்த்தி, விஷால், தனுஷ், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், விக்ரம், ஜெயம் ரவி, பிரபு, நடிகைகள் ரோஹினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், இயக்குனர்கள் சங்கர், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோர் நிதியுதவி வழங்கியுள்ளார்கள்.
இந்நிலையில், மும்பை மாடல் அழகியும், நடிகையுமான பூனம் பாண்டே, தற்போது நடித்து வரும் தெலுங்கு படத்திற்கான தனது முழு சம்பளத்தை கேரள மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவியாக வழங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











