உதடுக்கும் உதடுக்கும் தூரம்.. பூனம் பாண்டேவின்.. "கொரோனா முத்தம்"!
சென்னை: பூனம் பாண்டே தனது காதலனுக்கு வித்தியாசமான முறையில் முத்தம் கொடுத்துள்ளார்.
இணையத்தின் கவர்ச்சி நாயகியான பூனம்பாண்டே தற்போது மீண்டும் இணையத்தை திரும்பி பார்க்க வைக்க வித்தியாசமான ஒரு முயற்சியை கையில் எடுத்துள்ளார். எப்போதும் கவர்ச்சியின் மூலம் இணைய ரசிகர்களை திரும்பி பார்க்க வைக்கும் பூனம் பாண்டே தற்போது தனது காதலனுக்கு வித்தியாசமான முறையில் முத்தம் கொடுத்து இருக்கிறார் .

தன் முகத்தையும் தனது காதலன் முகத்தையும் துணியால் மூடி, உதட்டுடன் உதட்டை சேர்த்து முத்தம் கொடுத்திருக்கிறார். பூனம் பாண்டே எப்போதும் வித்தியாசம் கவர்ச்சியில் காட்டுவார் ஆனால் இந்த முறை பாதுகாப்பில் காட்டியிருக்கிறார் .
தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் வேறு வழியில்லவே இல்லை, தற்போதைய நிலைமையில் இதுதான் சரி என்று கூறியுள்ளார்கள். சில ரசிகர்கள் மாஸ்க்குடன் காதலா என்று கிண்டலாக கேட்டுள்ளனர் .

மேலும் இந்த புகைப்படத்திற்கு கீழ் பூனம்பாண்டே இதற்கு நல்ல கேப்ஷனை கொடுங்கள் என்று கூறியுள்ளார். இதற்கு பதிலளித்த பல ரசிகர் உங்களின் இந்த புதுவித முத்ததிற்கு கொரோனா முத்தம் என்று பெயர் வையுங்கள் என்று நகைச்சுவையாக கூறியுள்ளனர் .

நடிகை மற்றும் மாடலான பூனம் பாண்டே சில படங்களில் மட்டுமே நடித்திருக்கிறார் இருந்தும் இவருக்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் இவர் பகிரும் கவர்ச்சி மிகுந்த புகைப்படங்களுக்கும் வீடியோக்களும் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது .

பூனம்பாண்டே பல உச்சகட்ட கவர்ச்சி நிரம்பிய புகைப்படங்களையும் வீடியோக்களையும் வெளியிடுவார் ஆனால் சமூக வலைத்தளங்களில் பல வித ஆபாச விஷயங்களுக்கு தடை இருப்பதால் பூனம் பாண்டே எனும் ஆப்பின் மூலம் எந்த தடையும் இன்றி தனது ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இதனால் இவர் தனக்கென்று ஒரு தனி கவர்ச்சி ராஜ்ஜியத்தை கட்டமைத்து இருக்கிறார் என்றால் மிகையாகாது.


Click it and Unblock the Notifications











