கணவரை கட்டியணைத்தப்படி காதல் சொட்ட சொட்ட வீடியோ போட்ட பூனம் பாண்டே.. ராசி ஆயிட்டாங்களாம்!
மும்பை: நடிகை பூனம் பாண்டே தனது கணவரை கட்டியணைத்தப்படி காதல் சொட்ட சொட்ட எடுத்துள்ள வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.
கவர்ச்சி நடிகையான பூனம் பாண்டே, கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி தனது நீண்ட நாள் காதலரான தொழில் அதிபர் சாம் பாம்பேவை திருமணம் செய்து கொண்டார்.
தங்களின் திருமண போட்டோக்களை இருவரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து அப்படி ரொமான்ஸ் செய்து வந்தனர். அடுத்த ஒரு வாரத்தில் இருவரும் கோவாவுக்கு ஹனிமூன் புறப்பட்டனர்.

தகராறு
அவர்கள் ஹனிமூன் புறப்பட்ட போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. ஆனால் யார் கண் பட்டதோ புது மண தம்பதிகள் இருவருக்கும் இடையே ஹனிமூன் போன இடத்தில் தகராறு ஏற்பட்டது,

சாம் பாம்பே கைது
இதனை தொடர்ந்து தன்னை மிருகத்தை போன்று அடித்து துன்புறுத்துவதாக கூறி கோவா போலீஸில் புகார் அளித்தார். அதனடிப்படையில் சாம் பாம்பே கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்த பூனம் பாண்டேவின் போட்டோக்களை டெலிட் செய்துள்ளார்.

கணவருடன் நெருக்கமாக
இந்நிலையில் நடிகை பூனம் பாண்டே தற்போது மீண்டும் தனது கணவருடன் சேர்ந்துள்ளார். கணவருடன் தான் நெருக்கமாக இருக்கும் போட்டோக்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் நடிகை பூனம் பாண்டே.

உன் தலை பெரிசு
அதில் நீங்கள் ஏதாவது சொல்ல வேண்டுமா என கணவரிடம் கேட்கிறார் பூனம் பாண்டே. அதற்கு நீதான் சொல்ல வேண்டும் என்கிறார். மேலும் உன் தலை ரொம்பவே சின்னதா இருக்கிறது என சாம் பாம்பே கூற, ஏனென்றால் உன் தலை ரொம்ப பெரிசு என்கிறார் பூனம் பாண்டே.

12 லட்சம் வியூஸ்
இப்படியாக இருவரும் மாறி மாறி ரொமான்ஸ் செய்து கொள்கின்றனர். இந்த வீடியோ மட்டும் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ்களை குவித்துள்ளது. இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் இனிமேலாவது சண்டை போடாமல் ஒற்றுமையாக இருப்பீர்களா என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











