நிறைமாத கர்ப்பிணியான பூர்ணா.. கோலாகலமாக நடந்த வளைகாப்பு.. அழகிய புகைப்படங்கள்!

சென்னை : நடிகை பூர்ணாவிற்கு வளைகாப்பு விழா கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது.அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகை பூர்ணா அறிமுகம் ஆனார்.

அதன் பின் கொடைக்கானல், வேலூர் மாவட்டம், ஆடுபுலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அகண்டா, தலைவி, த்ரிஷ்யம் 2 ஆகிய படங்களில் இவரின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.

நடிகை பூர்ணா

நடிகை பூர்ணா

நடிகை பூர்ணாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த தொழிலதிபர் ஆஷிஃப் அலிக்கும் கடந்த மே மாதம் நிச்சயம் நடைபெற்றது. ஆஷிப் அலி, ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜெபிஎஸ் குரூப் என்ற நிறுவனத்தின் சிஇஓ.வாக இருந்து வருகிறார். பல ஆண்டுகளாக இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்தனர்.

துபாயில் திருமணம்

துபாயில் திருமணம்

இதையடுத்து, இவர்களின் துபாயில் கடந்த ஜூன் 12ந் தேதி நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது.விசா பிரச்சனை காரணமாக பலர் திருமணத்தில் கலந்து கொள்ளமுடியவில்லை என்றும், தற்போது கணவருடன் துபாயில் வசித்து வருகிறேன் என்று நடிகை பூர்ணா தனது திருமண புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டிருந்தார்.

நல்ல செய்தி சொன்ன பூர்ணா

நல்ல செய்தி சொன்ன பூர்ணா

திடீரென தனது யூடியூப் சேனலில் காட்சி அளித்த பூர்ணா, என்னுடைய கல்யாணத்திற்கு அனைவரும் இணையத்தின் வழியாக வாழ்த்து தெரிவித்து இருந்தீர்கள் உங்கள் அனைவரின் அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி. இந்த யூடியூப் வீடியோ ஒரு ஸ்பெஷலான வீடியோ, நான் அம்மாவாக போகிறேன். அந்த மகிழ்ச்சியான தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தொடர்ந்து உங்களின் ஆதரவும் வாழ்த்தும் என்றும் எனக்கு வேண்டும் என கூறியிருந்தார்.

கோலாகலமாக நடந்த வளைகாப்பு

கோலாகலமாக நடந்த வளைகாப்பு

இந்நிலையில் கர்ப்பமாக இருக்கும் நடிகை பூர்ணாவிற்கு பிரமாண்டமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. இந்த வளைகாப்பு நிகழ்ச்சியில், பூர்ணாவின் நெருங்கிய தோழிகள்,நண்பர்கள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளதால், பலரும் பூர்ணாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X