பூர்ணாவிடம் மிரட்டிய கும்பல்.. முக்கிய குற்றவாளி இன்று கைது.. பலரை கடத்தி பணம் பறித்த கொடூரம்!

By

கொச்சி: பிரபல நடிகையை திருமணம் செய்வதாக பழகி, பணம் பறிக்க முயன்ற கும்பலின் முக்கிய குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.

Recommended Video

திருமண மோசடி கும்பலிடம் சிக்கிய நடிகை பூர்ணா

இவர் தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு, வித்தகன், தகராறு, கொடிவீரன், சவரக்கத்தி உட்பட பல படங்களில் நடித்துள்ளவர், மலையாள நடிகை பூர்ணா.

மலையாளத்தில் ஷாம்னா காசிம் என்ற பெயரில் நடித்து வருகிறார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து வருகிறார்.

பணம்கேட்டு மிரட்டல்

பணம்கேட்டு மிரட்டல்

லாக்டவுன் காரணமாக கொச்சியில் உள்ள தனது வீட்டில் இருக்கிறார் இப்போது. இவரது அம்மா ரவ்லா, மராடு போலீஸ் நிலையத்தில் கடந்த புதன்கிழமை ஒரு புகாரை அளித்தார். அதில், சிலர் தங்களிடம் பணம் கேட்பதாகவும் கொடுக்கவில்லை என்றால் அழித்துவிடுவதாக மிரட்டுவதாகவும் கூறியிருந்தார். இது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நடிகை பூர்ணாவை மிரட்டிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நன்றாகப் பழகினர்

நன்றாகப் பழகினர்

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறும்போது, ரபீக் என்பவர் பூர்ணாவை போனில் தொடர்பு கொண்டு, திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகக் கூறியுள்ளார். இதற்கிடையே, கடந்த 3 ஆம் தேதி நடிகை பூர்ணாவின் வீட்டுக்கு ரபீக் உட்பட 6 பேர் சென்றுள்ளனர். திருமணம் பற்றி பேசுவதுபோல அவரது வீடு, வாகனம் உள்ளிட்டவற்றை வீடியோ எடுத்து வந்துவிட்டனர். கடந்த சில நாட்களுக்கு முன், நடிகையிடம் ஒரு லட்சம் ரூபாய் கேட்டுள்ளனர்.

வழக்குப் பதிவு

வழக்குப் பதிவு

இதனால் பூர்ணா குடும்பத்தினர் சந்தேகம் அடைந்தனர். அவர்கள் தொடர்ந்து பணம் கேட்டுள்ளனர். மறுத்ததால் மிரட்டி உள்ளனர். அதிர்ச்சி அடைந்த பூர்ணாவின் அம்மா, போலீசில் புகார் கொடுத்தார். வழக்குப் பதிவு செய்து திருச்சூரைச் சேர்ந்த ரபீக், சரத், அஸ்ரஃப், ரமேஷ் ஆகியோரை கைது செய்துள்ளோம் என்றனர். இந்த தகவல் வெளியானதும் கைது செய்யப்பட்ட கும்பல் மீது மேலும் சில பெண்கள் புகார் கொடுத்தனர்.

பாலியல் வன்கொடுமை

பாலியல் வன்கொடுமை

அவர்களிடம் தங்க நகைகள் மற்றும் லட்சக்கணக்கான பணம் ஆகியவற்றைப் பறித்துள்ளனர். குற்றவாளிகளின் புகைப்படங்கள் வெளியானதை அடுத்து 5 பெண்கள் நேற்று புகார் கொடுத்துள்ளார். அதில் ஒருவர் ஆழப்புழாவைச் சேர்ந்த நடிகை. சில பெண்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த அப்துல் சலாம் என்பவர் கொச்சி நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.

பெண்களை கடத்தி

பெண்களை கடத்தி

இதையடுத்து முக்கிய குற்றவாளியான ஷெரீஃபை போலீசார் தேடி வந்தனர். பாலக்காட்டைச் சேர்ந்த அவரை இன்று கைது செய்துள்ளனர். இந்தக் கும்பல், பல பெண்களை கடத்தி மிரட்டி பணம் பறித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்தக் கும்பலிடம் போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் வெளிமாநிலத்திலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதுதொடர்பாக மேலும் விசாரித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X