'புளூ வேல்'... அப்பாவிகளை கொல்லும் அரக்கன்... காப்பாற்றப் போராடும் பூர்ணா!
பூர்ணா நடித்துள்ள புளூ வேல் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
சென்னை: பூர்ணா நடித்துள்ள புளூ வேல் படத்தின் டீசர் பிரபல பாடகர் ஜேசுதாஸ் முன்னிலையில் வெளியிடப்பட்டது.
பியாண்ட் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் 8 பாயின்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் புளூ வேல். டி.ரங்கநாதன் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகை பூர்ணா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.


பலருடைய வாழ்க்கையை சீரழித்த புளூ வேல் விளையாட்டை மையமாக வைத்து தான் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. புளூ வேல் விளையாட்டால் நடந்த விபரீதமான தற்கொலைகளை மையமாக வைத்து காட்சிகளை அமைத்துள்ளனர்.

இந்த படத்தின் டீசர் சிங்கப்பூரில் இருந்து வெளியிடப்பட்டுள்ளது. பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் முன்னிலையில் டீசர் வெளியானது. இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கும் படத்துக்கு பிறகு நடிகை பூர்ணா, இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
Comments


Click it and Unblock the Notifications