ரகசியமாக திருமணத்தை முடித்த நடிகை பூர்ணா..துபாயில் குடித்தனம்!
நடிகை பூர்ணா தனது காதலனுடன் திருமணம் முடிந்துவிட்டதாக கூறி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் பிரபலமான நடிகையாக பூர்ணா கேரளாவை சேர்ந்தவர். இவரது உண்மையான பெயர் ஷாம்னா காசிம் சினிமாவிற்காக பூர்ணா என மாற்றிக் கொண்டார்.
தமிழில் பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் அறிமுகமான பூர்ணா, கொடைக்கானல், வேலூர் மாவட்டம், ஆடுபுலி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அகண்டா, தலைவி, த்ரிஷ்யம் 2 ஆகிய படங்களில் இவரின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.

நடிகை பூர்ணா
நடிகை பூர்ணா ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த தொழிலதிபர் ஆஷிஃப் அலி. இவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஜெபிஎஸ் குரூப் என்ற நிறுவனத்தின் சிஇஓ.வாக இருந்து வருகிறார். பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்த பூர்ணாவும், ஆஷிஃப்பும் கடந்த மே மாதம் நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணம் எப்போது என்ற எந்த விவரமும் தெரியவில்லை.

பிரேக் அப் வதந்தி
இருந்த போதும் பூர்ணாவும் ஆஷிஃப்பும் இணைந்து இருக்கும் பல போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து வந்திருந்தார் பூர்ணா. இந்த க்யூட் ஜோடிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர். ரசிகர்கள் பலர் எப்போது திருமண என கேட்டு வந்தனர். இதே சமயத்தில், பூர்ணாவிற்கும் அவரது காதலருக்கும் பிரேக்அப் ஆகி விட்டதாகவும், அவர்களின் திருமணம் நிறுத்தப்பட்டு விட்டதாகவும் மீடியாக்களில் தகவல் பரவியது.

திருமணம் முடிந்தது
இந்நிலையில், நடிகை பூர்ணா அளித்துள்ள பேட்டியில், எனக்கும் ஆஷிஃப்புக்கும் கடந்த மே மாதம் 31ந் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து, ஜூன் 12ந் தேதி எங்களுக்கு துபாயில் நெருங்கிய உறவினர்கள் மத்தியில் திருமணம் நடந்தது. விசா பிரச்சனை காரணமாக பலர் திருமணத்தில் கலந்து கொள்ளமுடியவில்லை. தற்போது கணவருடன் துபாயில் வசித்து வருகிறேன். திருமணம் துபாயில் முடிந்ததால், வரவேற்பு நிகழ்ச்சியை கேரளாவில் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார்.

பல வருட கனவு
மேலும், திருமணத்திற்காக என் பெற்றோர்கள் நிறைய இடத்தில் வரனை தேடினர். இறுதியில் ஆஷிஃப்பை திருமணம் செய்ய கேட்டபோது நானும் திருமணத்திற்கு சம்மதித்தேன். இதனைத் தொடர்ந்து சினிமாவில் நடிப்பேன். துபாயில் விரைவில் நடனப்பள்ளி தொடங்குவேன் இது என் பல வருட கனவு என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











