பிளேசரில் தாறுமாறு காட்டும் தமிழ் நடிகை.. வைரலாகும் புகைப்படங்கள் !

சென்னை : ஒரு சில வாரங்களுக்கு முன்பு பெண் பார்க்கும் கும்பலிடம் சிக்கி மீண்டு வந்த சர்ச்சையில் பலரையும் அதிர வைத்த நடிகை பூர்ணா இப்பொழுது கோட் சூட்டில் செம ஸ்டைலிஷாக போட்டோஷூட் எடுத்து அனைவரையும் கலங்க வைத்து வருகிறார்.

Recommended Video

விஷால் உனக்கு நான் வைக்கிறேன் ஆப்பு | MYSKIN ANGRY SPEECH | THUPPARIVAALAN 2 ISSUE | FILMIBEAT TAMIL

திரைப்படங்களிலும் வெப்சீரிஸ்களிலும் நடித்து வரும் இவர் தமிழ், மலையாளம் மட்டுமல்லாது பல்வேறு மொழிகளிலும், பல நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து படத்திற்கு படம் வித்தியாசமான வேடங்களில் ரசிகர்களை மிரள வைத்து வரும் பூர்ணா இப்பொழுது செம ஸ்டைலிஷாக கோட் சூட்டில் எடுத்துள்ள போட்டோக்கள் செம வைரலாகி வருகிறது.

எப்போதும் தவறியதில்லை

எப்போதும் தவறியதில்லை

வசீகரமான முகத்தோற்றம், அற்புதமான நடிப்பு திறமை, என எந்த ஒரு கதாபாத்திரமாக இருந்தாலும் தனது முழுமையான ஈடுபாட்டை அளித்து ரசிகர்களை ரசிக்க வைக்க இவர் எப்போதும் தவறியதில்லை. இவ்வாறு ஹீரோக்களுக்கு இணையாக படத்திற்கு படம் வித்தியாசமாக தன்னைப் பிரதிபலித்துக் கொண்டுவரும் நடிகை பூர்ணா தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு என பல மொழிகளில் கதாநாயகியாக கலக்கிக்கொண்டு வருகிறார்.

அற்புதமான நடிப்பின்

அற்புதமான நடிப்பின்

தமிழில் பரத் நடிப்பில் வெளியான முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான பூர்ணா, நடித்த முதல் படத்திலேயே ரசிகர்களை தனது மெச்சும் அழகின் மூலமும் அற்புதமான நடிப்பின் மூலமும் கவர்ந்த நிலையில் தற்போது பல்வேறு தமிழ் திரைப்படங்களிலும், வெப் சீரிஸ்களிலும் நடித்து செம பிஸியாக இருந்து வருகிறார்.

பெண் பார்க்கும் கும்பலிடம்

பெண் பார்க்கும் கும்பலிடம்

இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் நடிகர் வைபவ் இணைந்து முதல்முறையாக நடித்திருக்கும் லாக்கப் வெப் சீரிஸில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பூர்ணா சமீபத்தில், ஒரு பெண் பார்க்கும் கும்பலிடம் சிக்கி மீண்டது திரையுலகினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

செம ஸ்டைலிஷாக

செம ஸ்டைலிஷாக

இவ்வாறு எப்போதும் பரபரப்பாக இருந்து வரும் நடிகை பூர்ணா இதுவரை யாரும் பார்த்திராத வகையில் கோட் சூட்டுடன் செம ஸ்டைலிஷாக போட்டோ ஷூட் எடுத்து அந்த போட்டோக்களை தற்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். பல்வேறுவிதமான கோணங்களில் விதவிதமாக நடை உடை பாவனை என அனைத்திலும் வித்தியாசமாக எடுத்துள்ள இந்த கலங்கவைக்கும் பிளேசர் போட்டோஷூட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X