கிண்டல் செய்யும் சாந்தனு.. அடுத்த ரூமிற்கு ஓடும் பாக்யராஜ்.. சுவாரஸ்யம் பகிர்ந்த பூர்ணிமா!

சென்னை : டான்சராக விரும்பி நடிகையாக மாறியவர் நடிகை பூர்ணிமா பாக்யராஜ். ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

பாக்யராஜுடன் இணைந்து நடித்த பூர்ணிமா, அவரையே காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.

திருமணமாகி செட்டில் ஆன பூர்ணிமா பாக்யராஜ், 29 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் சினிமா, சீரியல்கள் என பிசியாகியுள்ளார்.

நடிகை பூர்ணிமா பாக்யராஜ்

நடிகை பூர்ணிமா பாக்யராஜ்

நடிகை பூர்ணிமா பாக்யராஜ் மிகப்பெரிய டான்சராக வேண்டும் என்ற கனவில் நடனம் பயின்றவர். தன்னுடைய கல்லூரி காலங்களில் காலை வேலைகளில் கல்லூரிப் படிப்பில் கவனம் செலுத்திவிட்டு, மாலையில் டான்ஸ் கிளாசிற்கு ஓடுவேன் என்று கூறும் பூர்ணிமாவிற்கு இந்த நடனம்தான் நடிகையாக மாறியபோது கைகொடுத்ததாம்.

காதல் திருமணம்

காதல் திருமணம்

ரஜினி, மோகன், பாக்யராஜ் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த பூர்ணிமா பாக்யராஜ், ஒரு கட்டத்தில் பாக்யராஜை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். சில காலங்கள் திருமண வாழ்க்கையில் ஓய்வெடுக்கலாம் என தான் நினைத்த நிலையில், ஓய்வே வாழ்க்கையாக மாறிவிட்டதாக பூர்ணிமா தனது சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார்.

29 ஆண்டுகளுக்கு பிறகு நடிப்பு

29 ஆண்டுகளுக்கு பிறகு நடிப்பு

தற்போது 29 ஆண்டுகள் கழித்து தன்னுடைய நடிப்பை மீண்டும் துவங்கியுள்ள நிலையில், தான் எவற்றையெல்லாம் இழந்திருக்கிறேன் என்பதை நினைத்து தான் வருத்தம் கொள்வதாகவும் கூறியுள்ளார். மேலும் தனக்கு பிடித்தமான டான்சை இத்தனை ஆண்டுகள் தொடாமல் இருப்பதும் வருத்தத்தை தருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குடும்பத்திற்கு தூணாகும் பெண்

குடும்பத்திற்கு தூணாகும் பெண்

பெண் ஒரு குடும்பத்தின் முதுகெலும்பாகவும் தூணாகவும் செயல்படுபவள் என்று கூறியுள்ள பூர்ணிமா, அதுவும் சக்சஸ்தான் என்றும் குறிப்பிட்டுள்ளார். தான் தன்னுடைய குடும்பத்தின் தூணாக இருப்பது உண்மைதான் என்றும் அவர் கூறியுள்ளார். தனக்கு நடனம்தான் மிகவும் பிடித்தமான விஷயம் என்றும் பூர்ணிமா தெரிவித்துள்ளார்.

கிண்டல் செய்யும் சாந்தனு

கிண்டல் செய்யும் சாந்தனு

தன்னுடைய நடனத்தை சாந்தனு எப்போதும் கேலி செய்வான் என்று தெரிவித்துள்ள பூர்ணிமா, நீயெல்லாம் இப்போது டான்ஸ் ஆடுறே, நான் அப்போதே சூப்பர்ஸ்டாரோட எல்லாம் நடனம் ஆடியிருப்பது குறித்து சாந்தனுவிடம் பேசுவேன் என்று தெரிவித்துள்ளார். அதற்கு சாந்தனு, பார்த்திருக்கிறேன், நீ எப்படி டான்ஸ் ஆடுவே என்று கேலி செய்வான் என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த ரூமிற்கு ஓடும் பாக்யராஜ்

அடுத்த ரூமிற்கு ஓடும் பாக்யராஜ்

தொடர்ந்து பேசிய பூர்ணிமா, தாங்கள் டான்ஸ் குறித்து பேசும்போதெல்லாம் பாக்யராஜ் அடுத்த ரூமிற்கு ஓடி விடுவார் என்றும் நகைச்சுவையாக பேசியுள்ளார். அந்த அளவிற்கு பாக்யராஜ்க்கு நடனம் என்றாலே ஆகாது என்றும் பூர்ணிமா குறிப்பிட்டுள்ளார். தற்போது அடுத்தடுத்த படங்கள், சீரியல்களில் கமிட்டாகி பூர்ணிமா நடித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X