ஆண்கள் வேஷ்டியில் பெண்களுக்கான ஸ்கர்ட், சட்டை.. லாக்டவுனில் அசத்திய நடிகை.. வாழ்த்தும் ரசிகர்கள்!
கொச்சி: ஆண்கள் உடுத்தும் வேஷ்டியில் பெண்களுக்கான ஸ்கர்ட்டும் சட்டையும் தயாரித்து அசத்தி உள்ளார் பிரபல நடிகை.
பிரபல மலையாள நடிகை பூர்ணிமா. இவர் தமிழில், விஜய்யின் காதலுக்கு மரியாதை படத்தில் தோழியாக நடித்துள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பான 'கோலங்கள்' தொடரிலும் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

குலாபி டாக்கீஸ்
தமிழ்ப் பெண்ணான இவர், நடிகர் பிருத்விராஜின் அண்ணன், இந்திரஜித்தை காதலித்து கடந்த 2002 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பிரார்த்தனா, நட்சத்திரா என்று இரண்டு மகள்கள் உள்ளனர். இவர் மலையாளத்தில் காட்டன் மேரி, நரனது தம்புரான், ரண்டாம் பாவம், டேனி, குலாபி டாக்கீஸ், வைரஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

லாக்டவுன்
இவர், ஃபேஷன் டிசைனரும் கூட. தனக்கான உடைகளை தானே வடிவமைத்துக் கொள்ளும் இவர், இப்போது லாக்டவுனில் வித்தியாசமான முயற்சியை மேற்கொண்டுள்ளார். கொரோனா லாக்டவுன் காரணமாக, மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். இதனால் ஏராளமானவர்கள் பொருளாதாரச் சிக்கலில் உள்ளனர்.

த்ரோபேக் போட்டோ
சினிமா படப்பிடிப்புகள் இல்லாததால், நடிகர், நடிகைகளும் வீட்டை விட்டு வெளியே வராமல் உள்ளனர். இதனால், தாங்கள் என்ன செய்கிறோம் என்பதை நடிகர், நடிகைகள் வீடியோவா கவும் புகைப்படங்களாகவும் எடுத்து தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். சிலர் தங்கள் த்ரோபேக் போட்டோக்களை பதிவிட்டு வருகின்றனர்.

வித்தியாச உடை
சில நடிகைகள், ஆன்லைனில் படித்து வருகின்றனர். நடிகை சமந்தா, ஆன்லைனில் நடிப்பு கற்கிறார். நடிகை நித்தி அகர்வால், தமிழ் கற்றுவருகிறார். இந்நிலையில், நடிகை பூர்ணிமா இந்திரஜித், வித்தியாசமான உடையை வடிவமைத்துள்ளார். அதாவது ஆண்கள் அணியும் வேட்டியை அவர் பெண்களுக்கான உடையாக மாற்றி வடிவமைத்துள்ளார்.

வருமா, இல்லையா?
அதை ஸ்கர்ட்டாகவும் அணிந்தபடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். இது கேரளாவில் வைரலாகி வருகிறது. பூர்ணிமாவின் இந்த வித்தியாசமான காஷ்ட்யூமை பலர் வரவேற்றுள்ளனர். இது விற்பனைக்கு வருமா, இல்லை உங்களுக்கான ஸ்பெஷலா? என்று சிலர் கேட்டுள்ளனர். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











