பெரிய இயக்குநர் என்னை படுக்கைக்கு அழைத்தார்.. பிரபல நடிகை பகீர் புகார்.. பரபரப்பில் திரையுலகம்!
சென்னை: பிரபல நடிகை பெரிய இயக்குநர் ஒருவர் தன்னை படுக்கைக்கு வருமாறு அழைத்ததாக கூறியிருப்பது திரைத்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பட வாய்ப்புக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைப்பது ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை தொடர் கதையாக உள்ளது.
பட வாய்ப்பு கேட்டு வரும் இளம்பெண்களையும் நடிகைகளையும் சில தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்கள் படுக்கைக்கு அழைக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

கிழிந்த முகத்திரை
அப்படி பாதிக்கப்பட்ட நடிகைகள் தங்களின் அனுபவங்களை #Metoo என்ற அமைப்பை உருவாக்கி புகார் அளித்து வந்தனர். இந்த மீடூ புகாரின் மூலம் ஹாலிவுட், பாலிவுட், கோலிவுட் என பல பிரபலங்களின் முகத்திரை கிழிந்தது.

திரைத்துறைக்கு ஷாக்
ஹாலிவுட் பிரபலங்கள் சிலர் சிறை தண்டனையும் பெற்றுள்ளனர். இந்நிலையில் பிரபல பாலிவுட் நடிகை தன்னுடைய மீடூ அனுபவத்தை பகிர்ந்து ஒட்டு மொத்த திரைத்துறைக்கு ஷாக் கொடுத்துள்ளார்.

ராக் ஆன்
அதாவது, பிரபல பாலிவுட் நடிகை பிராச்சி தேசாய். சின்னத்திரையில் இருந்து பாலிவுட் சினிமாவுக்கு அறிமுகமானார் பிராச்சி தேசாய். 2008ஆம் ஆண்டு வெளியான ஃபர்ஹான் அக்தர்ஸின் ராக் ஆன் படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார்.

காஸ்டிங் கோச்
தொடர்ந்து லைப் பார்ட்னர், தேரி மேரி கஹானி, போலீஸ் ஹேல், ஏக் வில்லன், ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் மும்பாய், கார்பன் உள்பட பல பிளாக் பஸ்டர் ஹிட்டுகளை கொடுத்துள்ளார். இந்நிலையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள பிராச்சி தேசாய் தனக்கு ஏற்பட்ட காஸ்டிங் கோச் அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

படுக்கைக்கு அழைத்தார்
அவர் கூறியிருப்பதாவது, ஒரு பெரிய படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அந்த படத்தின் இயக்குனர் நேரடியாகவே அவரது விருப்பத்துக்கு இணங்கும்படி அழைத்தார். படுக்கையை பகிர்ந்து கொள்ளும்படி வற்புறுத்தினார். நான் மறுத்துவிட்டேன்.

விரும்பவில்லை என்று கூறியும்
நான் மறுத்த போதும் தொடர்ந்து என்னை அழைத்தார். நான் உங்கள் படத்தில் நடிக்க விரும்பவில்லை என்று கூறிய போதும் கூட அவர் தொடர்ந்து அழைத்து கொண்டிருந்தார்.

ஒப்புக்கொள்ளவில்லை
அவருடன் படுக்கைக்கு நான் ஒப்புக்கொண்டு இருந்தால் இன்னும் நிறைய படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்புகள் வந்து இருக்கும். அப்படி நடிக்க தேவை இல்லை. பெரிய படத்தின் இயக்குனர் அழைத்துமே ஒப்புக்கொள்ள வில்லை.
Recommended Video

இயக்குநர் யார்?
குறைவான படங்களில் நடித்தாலும் நல்ல கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பேன் இவ்வாறு பிராச்சி தேசாய் தெரிவித்துள்ளார். பிராச்சி தேசாயின் இந்த பேட்டியை பார்த்த ரசிகர்கள் அந்த இயக்குநர் யார் என கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











