லாக்டவுன் திருமணம்.. 7 வருட காதலரை மணந்தார் பிரபல நடிகை.. மாஸ்க்குடன் கலந்து கொண்ட சொந்தங்கள்!

By

டெல்லி: தனது ஏழு வருட காதலரை பிரபல நடிகை நேற்று திருமணம் செய்துகொண்டார்.

பத்மகுமார் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான படம், மாமாங்கம். மலையாளத்தில் உருவான இந்தப் படம், தமிழ், இந்தி, தெலுங்கு மொழிகளிலும் வெளியானது.

மம்மூட்டி நடித்த இந்தப் படம் வரலாற்றுக் கதையை கொண்டது. தமிழ்ப் பதிப்புக்கு, இயக்குனர் ராம் வசனம் எழுதினார்.

பிராச்சி தெஹ்லான்

பிராச்சி தெஹ்லான்

இதில், பிராச்சி தேசாய், இனியா, மாளவிகா மேனன், கனிகா உட்பட பலர் நடித்துள்ளனர். இவர்களுடன் மற்றொரு ஹீரோயினாக நடித்தவர் பிராச்சி தெஹ்லான். டெல்லியை சேர்ந்த இவர், பேஸ்கட் பால் வீராங்கனை. தேசிய அளவிலான போட்டிகளில் தங்கப்பதக்கம் உட்பட பல பரிசுகளை வென்றுள்ளார். இந்தி டி.வி.சீரியலில் அறிமுகமான இவர், பின்னர் சில பஞ்சாபி படங்களில் நடித்தார்.

பண்ணை வீடு

பண்ணை வீடு

நடிகை பிராச்சி தெஹ்லானும் டெல்லியை சேர்ந்த ரோகித் சரோஹா என்பவரும் கடந்த 7 வருடங்களாகக் காதலித்து வந்தனர். ரோகித், தொழிலபதிபராக இருக்கிறார். இவர்கள் காதலுக்கு இரு வீட்டு பெற்றோரும் சம்மதம் தெரிவித்ததை அடுத்து திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். அதன்படி இவர்கள் திருமணம் டெல்லி அருகே உள்ள பண்ணை வீடு ஒன்றில் நேற்று எளிமையாக நடந்தது.

நெருங்கிய சொந்தங்கள்

நெருங்கிய சொந்தங்கள்

திருமண கொண்டாட்டங்கள், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் நேற்று முன் தினம் தொடங்கியது. இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோவை நடிகை பிராச்சி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கொரோனா வேகமாக பரவி வருவதால் நெருங்கிய சொந்தங்கள் மட்டும் நண்பர்கள் மட்டுமே இதில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

காதலில் விழுந்தோம்

காதலில் விழுந்தோம்

முன்னதாக, நடிகை பிராச்சி தெஹ்லான் கூறும்போது, 'உறவினர் திருமணம் ஒன்றில்தான் ரோகித்தை முதன் முதலாகச் சந்தித்தேன். அவர் தனது காதலைச் சொன்னார். திருமணம் செய்துகொள்ள சம்மதமா? என்று கேட்டார். பிறகு காதலில் விழுந்தோம். எளிமையாக எங்கள் திருமணம் நடக்க இருக்கிறது. லாக்டவுன் காரணமாக, 50 பேருக்கு மட்டும் அழைப்பு விடுக்க இருக்கிறோம்.

கண்டிப்பாக மாஸ்க்

கண்டிப்பாக மாஸ்க்

காலையில் நிச்சயதார்த்தம். மாலையில் திருமணம் நடக்க இருக்கிறது. திருமணத்துக்கு வருகிறவர்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து வரவேண்டும் என்று கூறியுள்ளோம். உடல் ஆரோக்கியம் முக்கியம் என்பதால் இந்த ஏற்பாடு. மாஸ்க் அணிந்து வரவில்லை என்றால் அவர்களுக்கு வழங்குவதற்காக அதை நாங்களே ஏற்பாடு செய்துள்ளோம் என்று தெரிவித்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X